முக அழகுக்கு நேரம் செலவிடும் பெண்கள் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். நகங்கள் அழகாக இருக்க நகங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.
நகங்களைப் பராமரிக்க இதோ சில டிப்ஸ்……..
* நகங்கள் எளிதில் உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களைச் சாப்பிட வேண்டும்.
* சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், அடிக்கடி நகங்கள் உடையாமல் உறுதியாகும்.
* விரல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க, தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைக்க வேண்டும்.
* நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.
* ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.
* கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.
* மேலும் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினால் நகம் பொலிவுடன் காணப்படும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகங்களைத் தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் சுத்தமாகும்.