29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
138
முகப் பராமரிப்பு

இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்க சில வழி.

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து, முகத்தில் வரும் கரும்புள்ளிகளை நீக்க முடியும். இதற்காக அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

உருளைக்கிழங்கை நறுக்கி, அதனை முகத்தில், 15 நிமிடம் தேய்த்த பின், காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.

வெந்தயக் கீரையை, நன்கு அரைத்து, பேஸ்ட் செய்து கொள்ளவேண்டும். 1பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும், கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

கொத்தமல்லியுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, காயவைத்து கழுவி வந்தால், கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும், இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

ஓட்ஸை பவுடர் செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.

தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.

பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 30நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.
138

Related posts

மூக்கின் அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ் tamil beauty tips

nathan

மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும்……

sangika

சருமத்திற்கு அழகு தரும் பீர் பேஷியல்

nathan

சென்சிட்டிவ் சருமத்திற்கு ஃபேசியல்

nathan

முகத்தில் எண்ணெய் வடியுதா? இந்த ஃபேஸியல் செய்யலாம். !

nathan

மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க டிப்ஸ்

nathan

கறுப்பா இருக்கீங்களா? கவலைபடாதீங்க

nathan

மு‌க‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளு‌ம் ‌தீ‌ர்வுகளு‌ம்

nathan

சிகப்பழகு பெற சூப்பர் டிப்ஸ்… ஒரு பேரிச்சம்பழம் போதும்..

nathan