28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
611687
அழகு குறிப்புகள்

தளபதி 65 வாய்ப்பை தட்டி தூக்கிய நடிகை இவர் தான்–விஜய்யுடன் நடிக்க 3.5 கோடி சம்பளம்

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். கடைசியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியையை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இப்படியான படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல தயாரிப்பாளர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் சென்ற டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு வீடியோ மூலமாக வெளியிட்டு இருந்தனர். இப்படியான படத்தை இயக்க இருக்கும் நெல்சன் ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர்.

இப்படியான படத்தில் விஜய்க்கு ஹீரோயின்னகா யார் நடிப்பார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அதில் ராஷ்மிகா மற்றும் பூஜா ஹேகடே்வின் பெயர்கள் அதிகமாக அடிபட்டது. இவர்கள் இருவர் பெயரும் மாஸ்டர் படத்தின் போதே விஜய்க்கு ஜோடி போடும் லிஸ்டில் அடிபட்டது. சம்பளப் பிரச்னை காரணமாக இழுபறி நீடித்துவந்த நிலையில் தற்போது பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.

தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் பூஜா ஹெக்டேவை 3.5 கோடி சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது சன் பிக்சர்ஸ். விஜய் 65 படம் குறித்து பேட்டியளித்திருந்த நடிகை பூஜா ஹெக்டே, “மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன். விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று பல நாள் நினைத்திருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் அது நடந்தால் மகிழ்ச்சி. விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்றுகூறி இருக்கின்றார்.

Related posts

அம்மாடியோவ்! பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் முதல்பட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nathan

குளிர்ச்சி குளியல்

nathan

அழகு தரும் குளியல் பொடி

nathan

சனியின் மாற்றம்: இந்த ராசிகளின் காட்டில் பண மழை

nathan

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால்

nathan

நீங்களே பாருங்க.! தொடை வரை பாவாடையை ஏற்றிவிட்டு.. – வேற லெவல் கிளாமரில் இறங்கிய அனிகா

nathan

மனம் திறந்த விக்கி! ரெண்டு புள்ளைக்கு அப்பான்னு என்னாலே நம்ப முடியல

nathan

நடிகர் அப்பாஸ் இப்போது என்ன செய்கிறார்? லீக்கான புகைப்படம்

nathan

முகத்தின் குறைகளை எப்படி சரிசெய்வது?

nathan