ஐசிங் என்றால் கேக் அலங்காரம் என தான் உங்களில் பலரும் நினைப்பீர்கள். அது தான் இல்லை. இங்கே நாங்கள் கூறும் ஐசிங் என்பது சரும பராமரிப்பில் ஒரு முறையாகும். சரும பராமரிப்புக்கு பல விதமான பொருட்கள் சந்தையில் விற்கப்படுகிறது. அதை பலரும் வாங்கி பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் அத்தகைய பொருட்களில் ஆபத்தான சில ரசாயனங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என நாம் கேள்விப்படுகிறோம். அதனால் சரும பராமரிப்புக்கு சிலர் இயற்கையான வழிமுறைகளையும் கையாளுகின்றனர்.
அப்படி உலகம் முழுவதும் புகழ்பெற்று கொண்டிருக்கும் ஒரு இயற்கையான சரும பராமரிப்பு வகை தான் ஐசிங். அழகிய சருமத்தைப் பெற வேண்டுமானால், உங்களை நீங்களே உறைய வைக்க வேண்டுமா என யோசிக்க தோன்றும். ஆனாலும் கூட இப்படி குளிர்ந்த தட்ப வெப்பநிலையில் சிகிச்சை அளிப்பது தான் தற்போதைய அழகு நாகரீகமாக விளங்குகிறது. குறைந்த தட்ப வெப்பநிலையில் உடலை வெளிப்படுத்துவதால் சுருக்கங்களில் குறைவு, சுடரொளியினை ஊக்குவிப்பு, சரும திடமாக்கல் என பல வித பயன்கள் கிடைக்கும். குளிர்ந்த சிகிச்சை ஸ்பாக்களிலும் சரும பராமரிப்பு சிகிச்சைகளிலும் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு பின்னணியில் பல காரணங்களும் உள்ளது; கொழுப்பு அணுக்கள் மற்றும் சுருள்சிரைகளை அழிக்கும் சிகிச்சைகளும் இதில் அடங்கும். சரும ஐசிங் செய்வதால் உங்கள் அழகிற்கு எவ்வகையில் அது உதவுகிறது என்பதைப் பார்க்கலாமா?
மென்மையான சருமம்
சரும ஐசிங் உங்கள் முகத்தை பதனிடப்படுத்தும். இதனால் சருமத்தின் தோற்றம் மென்மையாகும். குப்பைகள் மற்றும் அதிகமான சரும மெழுகால் பெரிதாக இருக்கும் துவாரங்களின் அடைப்பை நீக்க உதவுவதால், மேலும் பெரிதாக உள்ள துவாரங்களை குறைக்கவும், இறுக்கவும் இது உதவும்.
சரும பதனிடுதல்
மேக்-அப் போடுவதற்கு முன் முதலில் ஐஸ் கட்டியை கொண்டு முகத்தில் தடவவும். அதன் பின்னரே பிரைமரைத் தடவ வேண்டும். இது மலிவான சரும பதனிடுதலாக செயல்படும். மேக்-கப்பிற்கு கீழ் உள்ள மிகப்பெரிய துவாரங்களின் தோற்றங்களை இது குறைக்கும். இதனால் ஃபவுண்டேஷன் மென்மையாகவும் குறைபாடற்றதாகவும் இருக்கும்.
இரத்த ஓட்டம் மேம்படும்
ஐஸ் கட்டி என்பது உங்கள் சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். குளிர்ச்சி உங்கள் இரத்த குழாய்களை சுருங்க செய்யும். அதனால் சரும மேற்பரப்பிற்கு குறைந்த அளவிலேயே தான் இரத்தம் செல்லும் (இது வீக்கம் அல்லது அழற்சியை குறைக்கும்). பின் மெதுவாக அந்த பகுதிகளுக்கு வெப்பமான இரத்தம் பாய்ந்தோடும்.
கண் அழகு
ஐஸ் தடவுவதால் கண்களுக்கு கீழ் ஏற்படும் வீக்கம் குறையும்.
சிவப்பாதல் கட்டுப்பாட்டில் இருக்கும்
ஐஸ் தடவுவதால் பருக்களினால் சருமம் சிவப்படைதல் குறையும். எரிச்சல் ஏற்படுத்தும் சருமத்திற்கும் இதமளிக்கும். பரு வர தொடங்கினாலே அதன் மீது ஐஸ் கட்டி வைத்து தடவினால் அழற்சி குறையும். இதனால் சிவப்பாதலின் அளவும் எண்ணிக்கையும் குறையும். பருக்களின் மீது ஐஸ் கட்டியை வைக்கவும். அந்த இடம் மரத்து போகும் வரை சில நொடிகளுக்கு அப்படியே வைத்திருக்கவும்.
ஒவ்வொரு நாள் இரவும் ஐஸ் பயன்படுத்துதல்
நுண்ணுயிர் எதிர்ப்பி முகவர்களாகவும் மேற்பூச்சு ஆன்டி-பயாடிக்ஸ் ஆகவும் துவாரங்களுக்குள் நுழைந்திட ஐஸ் கட்டிகள் உதவும். இந்த மேற்பூச்சு சிகிச்சைகளால் அது மிக ஆழமாக சருமத்திற்குள் நிழையும். அதற்கு காரணம் ஆழமாக ஊடுரவ உங்கள் சரும மேற்பரப்பை அது ஊடுருவத்தக்க வகையில் அமைக்கும்.
வெப்பத்தில் தோல் கருப்பாவதைக் கட்டுப்படுத்துதல்
ஒரு ஐஸ் கட்டியை உங்கள் முகத்தின் மீது தடவினால் அது சருமத்தை மென்மையாக்கி, வெப்பத்தாலான கருமையை குறைக்கும். சூரிய வெப்பத்தில் இருந்து தற்காலிக நிவாரணம் வேண்டுமானால், ஐஸ் கட்டிகளை முகம் முழுவதும் தடவுங்கள்.
பருக்களை உறைய வைத்தல்
பருக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐஸ் கட்டிகளை மெதுவாக தடவினால் சருமம் குளிர்ச்சி அடையும். பாதிக்கப்பட்ட இடங்களில் ஐஸ் கட்டிகளை 2-3 நிமிடங்கள் வரை தடவவும். அல்லது சருமம் ஈரமடைந்து, குளிர்ச்சியைப் பெறும் வரைக்கும் தடவவும். ஐஸ் கட்டியை நீண்ட நேரம் சருமத்தில் வைக்க வேண்டும். அது சருமத்தை உறையச் செய்து விடும்.
ஐஸ் ஃபேஷியல்
ஐஸ் ஃபேஷியலை தொடங்குவதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். பின் துடைப்பதற்கு மென்மையான துணியை எடுத்து, அதில் 1-2 ஐஸ் கட்டிகளை போட்டு மூடிக்கொள்ளுங்கள். ஐஸ் கட்டி உருகி, துணி ஈரமாகும் வரை இதனை முகத்தில் தடவுங்கள். 1-2 நிமிடங்கள் வரை இந்த துணியை முகத்தின் பல பகுதிகளில் தடவுங்கள். வட்ட இயக்கத்தில் அந்த ஐஸ் கட்டிகளை உங்கள் தாடை, கன்னங்கள், நெற்றி, மூக்கு மற்றும் கண்களுக்கு கீழ் மென்மையாக தடவுங்கள். டோன்னர், பரு சிகிச்சை மற்றும் மாய்ஸ்சுரைசருடன் இந்த ஃபேஷியலை முடித்துக் கொள்ளுங்கள்.
கூடுதல் தகவல்கள்:
பொதுவாக முகத்தை மூடாமல் தான் ஐசிங் செய்யப்படுகிறது. அப்படி செய்தால், நீங்கள் கைகளுக்கு உரைகள் அணிந்து கொள்ள வேண்டும். (வெறும் கைகளில் ஐஸ் கட்டிகளை நீண்ட நேரம் பிடித்திருந்தால், கைகள் உறைந்து போகும்).
ஐஸ் கட்டிகளை அப்படியே பயன்படுத்த போகிறீர்கள் என்றால், அவைகளை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்த உடனேயே தடவாதீர்கள். அதிகமான குளிர் சருமத்திற்கு கீழ் இருக்கும் தந்துகிகளை உடைத்து விடும். ஏற்கனவே உடைந்த தந்துகிகளை கொண்ட சருமத்தின் மீது வெறும் ஐஸ் கட்டிகளை பயன்படுத்த வேண்டாம். அதே போல் நீண்ட நேரமும் இதனை தடவ வேண்டாம்.
குளிர் உங்களுக்கு சேரவில்லை என்றால் உடனே நிறுத்தி விடுங்கள். ஒரு பகுதியில் தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு மேல் ஐசிங் செய்யாதீர்கள்.