26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
7 15honey jpg
சரும பராமரிப்பு

பெண்களே தெருந்துகொள்ளுங்கள்! அழகைப் பராமரிக்கும் போது தேனை சேர்ப்பதற்கான 15 வழிகள்!!!

தேன் பிடிக்காத யாராவது இருப்பார்களா? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேன் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. தேனை உணவாக பயன்படுத்தலாம் என்பது நம் அனைவருக்குமே தெரியக்கூடிய ஒன்றே. அது மட்டுமல்லாது, தேனில் பலவித மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் ஏராளமோ ஏராளம். பழங்கால ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் இருந்து நவீன மருத்துவம் வரைக்கும் அது பல விதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தேனை நாம் விரும்புவதற்கு இது மட்டும் தானா காரணம்? அதன் சுவை அறிந்தவர்கள் அதற்காகவே அதன் மீது அலாதி பிரியம் கொண்டிருப்பார்கள். ஆனால் அழகிற்கு முக்கயத்துவம் அளிப்பவர்களும் தேன் என்றால் பிரியமாக இருக்கும். அதற்கு காரணம் தேனை அழகு பொருளாகவும் பயன்படுத்தலாம். ஆம், அழகு ரீதியான பல பயன்களையும் அது நமக்கு அளிக்கிறது. நாமே செய்து கொள்ளும் சில அழகு சிகிச்சைகளுக்கு தேனை சிறந்த முறையில் பயன்படுத்தலாம். அது எப்படி என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாமா?

உதடு ஸ்கரப்

உதடு ஸ்கரப்பில் தேங்காய் எண்ணெயுடன் தேனை கலந்திருப்பது ஈரப்பதத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், இறந்த தோலை நீக்கவும் உதவும்.

காபி, தேன், சர்க்கரை ஸ்கரப்

இந்த மூன்றையும் சேர்த்து சருமத்தை ஸ்கரப் செய்தால், அது இறந்த தோலை நீக்கி, முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும்.

லவங்கப்பட்டை மற்றும் தேன் – கரும்புள்ளி சிகிச்சை

இந்த கலவை விசித்திரமான ஒன்றாக இருக்கலாம், ஆனால் லவங்கப்பட்டையும் தேனும் கலக்கும் போது சருமத்தில் இருந்து கரும்புள்ளிகளை எடுக்க உதவும். இந்த கலவையில் குணமாக்கும் தன்மையும், நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்களும் அடங்கியுள்ளது.

பிரகாசமடைய மற்றும் இறுக்கமடைய உதவும் ஃபேஸ் பேக்

சமையலறையில் சுலபமாக கிடைக்கும் பொருட்களை கொண்டு செய்யப்படும் ஃபேஸ் மாஸ்க் இது. சருமத்தை பிரகாசமாக்கும் இந்த பேக்கில் தேனின் பங்கு அதிகம். ஆற்றும் குணத்தை கொண்டுள்ள தேன் சருமத்தை இறுக்கமாக்கி, பிளவுகளை நீக்கும். மேலும் தழும்புகளை போக்கும். உணர்ச்சியுள்ள சருமம் என்றால் எலுமிச்சை கடுக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். அதனால் அதனை முகம் முழுவதும் தடவுவதற்கு முன்பு, சிறிது இடத்தில் லேசாக தடவி பார்க்கவும்.

வெண்ணெய்ப்பழ மாஸ்க்

தேன் மற்றும் வெண்ணெய்ப்பழம் சேர்க்கப்பட்ட மாஸ்க்கை எளிமையாக தயார் செய்து கொள்ளலாம். இது சிறந்த பலனையும் அளிக்கும். சற்று அசுத்தமாக தான் இது தெரியும். என்றாலும் கூட உங்களுக்கு ஆற்ற போகும் நன்மைக்கு அளவே இல்லை.

பூசணி பழம் உதடு தைலம்

இந்த இனிப்பான தைலம் ஈரப்பதத்தை அளிக்கும். மேலும் முழுமையாக உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இது. அதனால் இதனை அருமையான பொருளாக ஆக்கியுள்ளது.

ஓட்ஸ் தேன் ஃபேஸ் ஸ்க்ரப்

நீங்கள் தினமும் பயன்படுத்தும் க்ளென்சர் அதன் வேலையை திறம்பட செய்யவில்லையா? அப்படியானால் இந்த ஸ்க்ரப் உங்களுக்கு சிறந்த பயனை அளிக்கும். குறிப்பாக குளிர் காலத்தில் பயன்படுத்தவும் வறண்ட சருமத்திற்கு பயன்படுத்தவும் இது உகந்ததாக உள்ளது.

தேன் ஷாம்பு

தேன் மற்றும் தண்ணீரை கொண்டு செய்யப்பட்டுள்ள ஷாம்பு, அதன் இயற்கை எண்ணெய்களை வெளிப்படுத்தாமலேயே உங்கள் முடியை சுத்தமாக்கும். முடியின் சிக்கல்களை குறைத்து, பொடுகை ஒழித்து கட்டி, முடியை மென்மையாக, வழுவழுப்பாக மற்றும் மேலும் பிரகாசமாகவும் மாற்றும்.

தேன் ஹேர் மாஸ்க்

தேன் ஷாம்பு வேண்டாம் என்றால், இந்த ஹேர் மாஸ்க்கை நீங்கள் பயன்படுத்தலாம். சிக்கனமான இது மிகப்பெரிய பரிசாக அமையும். ஈரப்பதத்தை அளித்து உங்கள் அழகை இது மேம்படுத்தும்.

தேன் உடல் வாஷ்

நான்கு எளிய சேர்க்கைகள், 1 பாட்டில் மற்றும் இயற்கையான உடல் வாஷ் – இது போதாதா உணர்ச்சியுள்ள சருமத்திற்கும் சுத்தமான வாழ்விற்கும்.

தேன் தேங்காய் உடல் வெண்ணெய்

மிதமான மற்றும் க்ரீமி உடல் வெண்ணெய்யான இதில் தஹேன் எடுக்கப்படும் செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. இதனால் இது திடமாகவும் தேன் வாசனையுடன் விளங்கும்.

தேன் மற்றும் லவங்கப்பட்டை முடி சிகிச்சை

சரும பாதிப்பை சீர் செய்ய லவங்கப்பட்டை பெரிதும் உதவும். இதனுடன் முடிக்கு புத்துணர்வு அளிக்கும் குணங்களும் அடங்கியுள்ளது. இந்த மசாலா இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதால், உங்கள் முடி வேகமாக வளர உதவும். இதனால் முடியை திடமாக்கும் தேன் மாஸ்க்கிற்கு வேர்ந்த கூட்டாக இது அமையும்.

வீட்டில் செய்யப்பட்ட உடல் வெண்ணெய்

மற்றொரு தேன் வெண்ணெய் இது. இதில் தேங்காய் எண்ணெய், தேன் மற்றும் சிட்ரஸ் பழங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். வீட்டில் தயாரிக்கப்படும் இந்த உடல் வெண்ணெய் இயற்கையான சரும பராமரிப்பு பொருளாக செயல்படுவதோடு மட்டுமல்லாது, ஷேவிங் மற்றும் உலர்ந்த புள்ளிகளுக்கு கூட உதவும். டீக்கு நறுமணம் அளிக்கவும் இது உதவும்.

தேன் பாத நனைத்தல்

கோடைக்காலம் முடியும் தருவாயில், முக்கியமான விஷயங்களைப் பற்றி கவனம் கொள்ள வேண்டியது அவசியம். கோடைக்காலத்தில் சுற்றுலா சென்ற போது உங்கள் பாதங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும். அதனால் அந்த பாதங்களுக்கு நிவாரணம் அளிக்க இதமளிக்கும் மற்றும் செத்த தோல்களை நீக்கும் தன்மையை கொண்ட இதை பயன்படுத்தலாம்.

தேன் தேங்காய் உடல் போர்வை

சருமத்தை இதமாக்கும் பொருட்களைப் பற்றி பார்க்கையில், இந்த பொருள் மிக முக்கியமான ஒன்றாகும். இதனை நன்றாக எடுத்து பயன்படுத்தலாமா அல்லது டீஸ்பூன் கணக்கில் பயன்படுத்தலாமா என்பது உங்களை பொறுத்து உள்ளது.

Related posts

பாதங்களை பராமரிக்க உதவும் குறிப்புகள் !!

nathan

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் இத செய்யுங்கள்!…

nathan

முகப்பருக்களை விரட்டும் ஆரஞ்சு

nathan

உங்க கழுத்து கருப்பா இருக்கா? அதை நீக்க இதோ சில வழிகள்

nathan

அழகாக இருக்க எளிய வழி,

nathan

இடுப்பு, கழுத்து, அக்குள்… கருமை நீங்க அருமையான வழிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் அருமையான நன்மைகள்!!

nathan

குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்

nathan

இயற்கை முறையில் பெண்கள் சரும அழகை மேம்படுத்த சில குறிப்புகள்

nathan