27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
625.500.560.350.160.300.053.800
தலைமுடி சிகிச்சை

பெண்களே உங்களுக்கு தாறுமாறாக முடி கொட்டுதா? இந்த வடையை எண்ணெயில் போடுட்டு தேய்ங்க!

முடி உதிர்வு பிரச்சனை இருக்கா என்று கேட்டால் யாருக்குத்தான் இந்த பிரச்சனை இல்லாமல் இருக்கு என்ற பதில் எல்லோரிடமிருந்தும் வரக்கூடும்.

இந்த முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன என்று கேட்கலாம். கை வைத்தியம் போன்று பாட்டி கால வைத்தியமே போதும்.

இதற்கு தேவைப்படும் பொருள்கள் எல்லாமே எளிதாக கிடைக்ககூடியவைதான் என்பதால் எல்லோரும் வீட்டிலேயே இதை தயாரிக்கவும் செய்யலாம்.

தேவையான பொருள்கள்
பொன்னாங்கண்ணி கீரை – 1 கைப்பிடி
கரிசலாங்கண்ணி கீரை – 1 கைப்பிடி
மருதாணி இலை – 1 கைப்பிடி
நாட்டு கறிவேப்பிலை – 1 கைப்பிடி
செம்பருத்தி இலை – 1 கைப்பிடி
கீழாநெல்லி – அரை கைப்பிடி,
பெரிய நெல்லிக்காய் – 5
வெந்தயம் – 3 டீஸ்பூன்
செய்முறை
நெல்லிக்காயை கொட்டை நீக்கி எடுக்கவும்.

இலையை காம்பு இல்லாமல் சுத்தம் செய்து மண் போக அலசி சற்று ஈரப்பதம் இருக்கும் போதே இலைகளுடன் நெல்லிக்காயும் சேர்த்து ஆட்டுக்கல் அல்லது மிக்ஸியில் நீர் விடாமல் அரைக்கவும்.

இலையில் இருக்கும் பொருள்கள் எல்லாமே சாறு நிறைந்தவை என்பதால் அதில் இருக்கும் நீரே போதுமானதாக இருக்கும்.

அரைத்த விழுதை மொத்தமாக சேர்த்து அதில் வெந்தயப்பொடி கலந்து நன்றாக கலக்கவும்.

பிறகு இவை ஈரப்பதமாக இருக்கும் போதே, வடையாக தட்டி வெயிலில் காயவைக்கவும். நன்றாக காய வேண்டும். இல்லையெனில் இதில் பூஞ்சை பிடித்து பயன்படுத்த முடியாமல் போகும்.

வடையாக தட்டி காயவைத்ததும் அதை எடுத்து பாட்டிலில் வைத்துகொள்ள வேண்டும்.

மாதம் ஒருமுறை தேவையான அளவு தேங்காயெண்ணெய் எடுத்து இதில் 5 வடைகள் அளவு சேர்க்கவும். இவை ஊற ஊற எண்ணெயின் நிறம் கருமையாக மாறிவிடக்கூடும். பிறகு அதை கூந்தலில் தடவி வந்தால் முடி உதிர்வு நிற்கும்.

இப்படியோ தொடர்ந்து செய்தால் முடி அடர்த்தியாக வளரும்.

Related posts

தினமும் ஷாம்பு போட்டு குளிப்பவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கூந்தல் உதிர்வை தடுக்க இரவில் செய்ய வேண்டியவை

nathan

தலை முடி உதிர்கின்றது என்ற கவலையா? பாட்டி வைத்தியம்

nathan

அன்னாசியை உபயோகித்து அடர்த்தியான அழகான முடியை பெறுவதற்கான அட்டகாசமான ஐடியா!!!

nathan

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி இலைகளை எப்படி பயன்படுத்துவது? –

nathan

கூந்தல் எலிவால் போலிருக்கிறதா? இதை யூஸ் பண்ணுங்க!!

nathan

நீங்களும் முயற்சி செய்யுங்கள் ! முடி கொட்டுவதை நிறுத்தும் இயற்கை எண்ணெய்கள்

nathan

தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும் வெந்தயக்கீரை

nathan

தலை அரிப்பை போக்கும் ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை

nathan