28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
f3cc7ba0 414c 4c17 b9cc 34520d58b1ad S secvpf
சரும பராமரிப்பு

முதுகு அழகை பராமரிக்க டிப்ஸ்

பெரும்பாலோனோர் அதிகம் கவனிக்காமல் விடும் பகுதியும் முதுகுதான். இதனால் அதிகம் எண்ணெய் சேர்ந்து பருக்கள் தோன்றுகின்றன. எனவே முதுகு அழகுக்கும் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும். குளிக்கும் போது முகம், கை, கால்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவப்போல முதுகையும் கவனிக்க வேண்டும்.

தலைக்கு குளிக்கும் போது வழியும் எண்ணெய்கள் முதுகில்தான் தேங்குகின்றன. எனவே நீளமான பிரஷ் உபயோகித்து முதுகை சுத்தம் செய்யவேண்டும். முதுகுப் பகுதியை முழுவதாக சுத்தம் செய்ய இப்பொழுது நீண்ட கைப்பிடி உள்ள பிரஷ் கடைகளில் கிடைக்கிறது. அவற்றை வாங்கி உபயோகிக்கலாம். முதுகை ஸ்க்ரப் செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும். கடையில் கிடைக்கும் ஸ்க்ரப் உபயோகிக்க விருப்பமில்லை என்றால், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.

உப்பு சிறந்த ஸ்க்ரப் ஆக பயன்படுகிறது. உப்பை நன்றாக பொடித்து அதை நன்றாக முதுகு, கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஸ்க்ரப் செய்வதன் மூல இறந்த செல்கள் உதிர்ந்து விடும். ரத்த ஓட்டம் சீராகும். ஒரு சிலருக்கு முதுகு வறண்டு போய் விடும். இவர்கள் ஒரு ஸ்பூன் பேபி ஆயில் விட்டு நன்றாக முதுகுப் பகுதியை மசாஜ் செய்யவும். இதனால் முதுகு மென்மையாகும். இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் நான்கு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை சேர்க்கவும்.

இதனை நன்றாக கலந்து முதுகை நன்றாக தேய்க்கவும். பிறகு கழுவவும். உலர்ந்த சருமத்திற்கு ஈரத்தன்மை கிடைக்கும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் முதுகை கவனிக்காமல் விடுவதால் முதுகு மங்கலாகும். இதனால் முதுகில் கரும்புள்ளிகள், பரு தோன்றும். முதுகை அழகாக்கி பருவை போக்க இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் ஆறு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து முதுகை நன்றாக தேய்த்து கழுவவும். f3cc7ba0 414c 4c17 b9cc 34520d58b1ad S secvpf

எண்ணெய் பசை நீங்கி சருமம் பளிச் என்று ஆகும். வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவிவிடவும். இது முதுகிற்கு பொலிவு கிடைக்கும்.

Related posts

வறண்ட சருமத்திற்கேற்ற முகப் பூச்சுக்கள்

nathan

உங்கள் சருமத்திற்கு மெருகூட்டும் பிபி, சிசி, டிடி க்ரீம் பற்றி தெரியுமா? தெரியலைன்னா தெரிஞ்சுக்கோ!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டால் கண்டிப்பாக உங்கள் முகத்தில் எண்ணெய் வடியுமாம்…!

nathan

உங்களை மணப்பெண் போல் ஜொலிக்க வைக்கும் சந்தனம்!!

nathan

வெயில் காலத்தில் சருமம் நிறம் மாறுவதை தடுக்க

nathan

உப்பிய கண்கள் வயதான தோற்றத்தை தருகிறதா? இதை முயன்று பாருங்கள்!!

nathan

பனியால் சருமம் அதிகம் வறண்டு போகிறதா? அப்ப இத படிங்க!…

nathan

பனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும்!

nathan

சோடா உப்பு சருமத்திற்கு செய்யும் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

nathan