30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
giuti
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வு, முடி வெடிப்பு மற்றும் கரடுமுரடான முடி போன்ற பல பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. இதைத் தவிர்க்க நாம் தலைமுடியை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள கடைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவோம்.

ஆனால் அந்த கெமிக்கல் கலந்த பொருட்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, மோசமாக்கவே செய்யும். இதற்கு ஒரு சிறந்த வழி என்றால், இயற்கை பொருட்களால் தலைமுடியைப் பராமரிப்பது தான். கீழே குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி கொத்துகொத்தாக தலைமுடி உதிர்வதைத் தடுத்திடுங்கள்.
giuti
வெந்தயம்
வெந்தய விதைகளை தலைமுடிக்கு வலிமையாக்குவதோடு மட்டுமின்றி, மென்மையாகவும், பட்டுப்போன்றும் மாற்றும். அதற்கு சிறிது வெந்தயத்தை நுரில் ஊற வைத்து அரைத்து, அதில் சிறிது கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியின் தடலி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
tyiyu
வெங்காயம்
குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் ஒரு அற்புதமான பொருள் தான் வெங்காயம். அதற்கு வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை முடியின் வேர்ப்பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு குறைந்தது 3 முறை செய்தால், முடி உதிர்வது குறைந்து, அதன் வளர்ச்சி தூண்டப்படும்.
utitui
கடுகு எண்ணெய்
பலவீனமான மற்றும் வறண்ட தலைமுடிக்கு கடுகு எண்ணெய் மிகவும் நல்லது. அதற்கு சிறிது கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை தலைமுடியின் வேர்ப்பகுதியில் படும்படி தடவி மசாஜ் செய்து, ஒரு ஈரத்துணியால் தலையைச் சுற்றி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
rusuyu
கற்றாழை
கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, அதை தலைமுடியின் வேர்ப்பகுதியில் படுமாறு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இதனால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து, முடி மென்மையாகவும், பட்டுப்போன்றும் இருக்கும்.
iklbiuo
முட்டை
முட்டை தலைமுடிக்கு ஊட்டத்தை அளித்து, மயிர்கால்களை வலுவாக்கும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை பிரித்தெடுத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து நன்கு கலந்து, பின் அதை தலைமுடியில் தடவ வேண்டும். பின் ஒரு மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்புவால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தலைமுடி உதிர்வது நின்று, நன்கு வலுவாகும்.

Related posts

உங்களின் கூந்தலுக்கு எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் தரும் அதிசயமான நன்மைகள்

nathan

நீளமான ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? அப்போ இதை படிங்க…

nathan

முடியின் அடர்த்தி குறையுதா? முடி அதிகமா கொட்டுதா?

nathan

வெள்ளை முடியால் தொல்லையா? இவற்றை பயன்படுத்தினாலே போதும்!

nathan

பட்டுப்போன்ற கூந்தல் என்பது கனவல்ல, நிஜமாக்கக்கூடிய அழகே! எல்லாம் வீட்டிலேயே இருக்கு!

nathan

பேன்களை போக்கும் வீட்டு சிகிச்சை -பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் எளிய வழிமுறைகள்

nathan

உங்க கூந்தல் வளர என்ன செய்யலாம்?அப்ப இத படிங்க!

nathan

நரைமுடியை மீண்டும் கருமையாக்க முடியுமா?..

nathan