25 C
Chennai
Wednesday, Nov 13, 2024
E 1425276444
சரும பராமரிப்பு

வீட்டில் ஒரு பியூட்டி பார்லர்

வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற, வீட்டிலேயே உள்ளது கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை பயன்படுத்தி பார்த்தால், கருப்பு மறைந்து முகம் களையாக மாறும்.

அழகு தரும் தேங்காய்! அன்றாட சமையலில், முக்கிய இடம்பெறுவது தேங்காய்; இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல கலந்து, இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால், முகம் பிரகாசமாகும்.

இளநீரில் உள்ள வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து, மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால், மாசு மருவின்றி, முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூட, அவை காணாமல் போய்விடும்.

பாசிப்பருப்பு பிளீச்: முகத்தில் சிலருக்கு, ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல, திட்டுகள் தோன்றும். இதற்கு பாசிப்பருப்பு, சிறந்த பிளீச் போல செயல்படுகிறது. பாசிப் பருப்பு, கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை, நன்றாக காயவைத்து, பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும், பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவினால், முகத்தின் கருந்திட்டுக்கள் காணமல் போகும்.

பழக்கூழ் பேஷியல் : ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும், சம அளவு எடுத்து, கலக்கி பஞ்சில் முக்கி, முகத்தில் பூசவேண்டும். இதனால், முகம் நல்ல பிரகாசமாகவும், குளுமையாகவும் இருக்கும். கொட்டை நீக்கிய, பேரீச்சம்பழத்துடன், உலர்ந்த திராட்சை பழங்கள் சில சேர்த்து, ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அரைத்து, இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து, கொள்ளவும். இதை முகத்திற்கு, பேஸ் பேக் போல போட்டு, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும்.
வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், இந்த பேஷியல் மாற்றி விடும்.

பிசுபிசுப்பு நீங்க: முகத்தில் அதிக எண்ணெய் பசை இருந்தாலே, முகம் கருமை அடையும். தலையில் பிசுபிசுப்பை நீக்க ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை, வெந்நீரில் கலந்து, தலைக்கு தேய்த்து அலசினால், முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். ஆப்பிள் இலைகளை காயவைத்து, அதனை பொடியாக்கி, ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து, தலைக்கு தேய்த்து குளித்தால், கூந்தல் மென்மையாகும்.E 1425276444

Related posts

வெட்டிவேரை சேர்த்து குளிர வைத்து பிறகு வடிகட்டி கொள்ளவும். முகத்தை சுத்தம் செய்ததும் வெட்டிவேர் ஸ்ப்ரே செய்துகொள்ளவும்..

nathan

உடனடியாக சரும பிரச்சனை தீரனுமா? இன்ஸ்டன்ட் பலனை தரும் இந்த குறிப்புகள் ட்ரை பண்ணுங்க.

nathan

உடல் துர்நாற்றம் இருக்கா? அதைப் போக்க எளிதான அற்புதமான டிப்ஸ்கள் !

nathan

குளிர்கால சரும பராமரிப்பு

nathan

வெயிலால் சருமத்தில் ஏற்பட்ட கருமையைப் போக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

nathan

வரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….

sangika

சருமத்தை அழகுபடுத்த அரிசி கழுவிய தண்ணீர்

nathan

மூக்கின் பக்கவாட்டில் கருப்பாக உள்ளதா?

nathan

சருமத்தை பளபளப்பாக்கும் முட்டைக்கோஸ் பேஷியல்

nathan