தேவையான பொருட்கள்
- பன்னீர் – ஒரு கப்
- மைதா மாவு – இரண்டு கை
- அரிசி மாவு – இரண்டு கை
- சோல மாவு – ஒரு கை
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- இஞ்சி பூண்டு விழுது – கால் டீஸ்பூன்
- கரம் மசாலா – கால் டீஸ்பூன்
- எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
- முட்டை – ஒன்று
- எண்ணெய் – பொரிபதற்கு தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, சோல மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, அஜினோமோட்டோ, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, எண்ணெய், முட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு பன்னீர் துண்டுகளை சேர்த்து கலறவும்.
பின்னர் சுடனா எண்ணையில் பன்னிர் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
மிளகு தூள், உப்ப, துவி அல்லது தக்காளி சாஸ் வைத்து பரிமாறவும் .