23.4 C
Chennai
Wednesday, Dec 25, 2024
Turmeric Face Masks
முகப் பராமரிப்பு

பெண்களே உங்க கன்னங்கள் அழகாக ஜொலிக்க இத ட்ரை பண்ணுங்க

உடல் எடையை குறைக்க முயலும் போது, தொப்பை, தொடை, இடுப்பு போன்றவற்றில் உள்ள கொழுப்புக்களை மட்டும் தான் கரைக்க முயல்கிறோம். ஆனால் பெரிய கன்னங்கள் மற்றும் இரட்டை தாடைகள் போன்றவற்றை குறைப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கன்னங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கு ஒருசில உடற்பயிற்சிகள் உள்ளன. அதனைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் கன்னங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்கலாம். அதுமட்டுமின்றி, இந்த பயிற்சிகளில் சில ஒட்டியுள்ள கன்னங்களை சரியான அளவில் வைத்துக் கொள்ளவும் முடியும்.

 

கன்னங்களை அழகாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய பயிற்சிகளில் முதன்மையானது தான் வாயை குவித்தல். உதடுகளை இறுக்கமாக மூடி, 1 நிமிடம் குவித்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த மாதிரி ஒரு நாளைக்கு குறைந்தது 3 வேளை, 10 நிமிடம் செய்ய வேண்டும். முகத்தில் உள்ள தசைகளுக்கான சிறந்த பயிற்சி தான் சிரிப்பு. இவ்வாறு வாய் விட்டு நன்கு சிரிக்கும் போது, முகத்தில் உள்ள தசைகள் நீட்சியடைவதால், அது கன்னங்கள் அழகாக வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் 15 நிமிடம் சிரிப்பு பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பொதுவாக சூயிங்கம் போட்டால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இந்த சூயிங்கம் மெல்லுவது என்பது முகத்திற்கான ஒரு நல்ல பயிற்சியாகும். இதனால் இரட்டை தாடைகளை தவிர்க்கலாம். நன்கு பெரியதாக இருக்கும் கன்னங்களை குறைக்க இருக்கும் சிறந்த வழிகளுள் கன்னங்களை தூக்குதலும் ஒன்று. அதற்கு முடிந்த அளவில் கன்னங்களை தூக்குங்கள். அதற்காக கையை கொண்டு தூக்காதீர்கள். சிரிப்பதன் மூலம் கன்னங்களை நன்கு தூக்குங்கள்.

மீன் போன்று உதடுகளை குவித்து, 20 நொடிகள் வைத்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 10, 20 முறை செய்து வந்தால், கன்னங்களை குறைக்கலாம். வாயில் காற்றினை நிரப்பி 2 நிமிடம் கழித்து, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கன்னங்களை குறைப்பதோடு, கன்னங்கள் சரியாக இல்லாதவர்களுக்கு கன்னங்கள் சரியான அளவில் இருக்கும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! உங்க முகம் ஃபிரெஷ்ஷா, பளிச்சுன்னு இருக்க இந்த ஃபேஸ் ப்ளீச் பயன்படுத்துங்க!

nathan

இந்த உணவு பொருட்களை மட்டும் சாப்பிட்டீங்கனா… பொலிவான சருமத்தை பெறலாமாம்!

nathan

பெண்கள் சிவப்பழகை பெற..

nathan

15 நாட்களில் வெள்ளையான சருமம் வேண்டுமா? இதோ சில வழிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்

nathan

கண்ணாடி அணியும் பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

nathan

முகப்பரு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்

nathan

முல்தானி மெட்டி எதற்கெல்லாம் பயன்படுகிறது?தெரிந்துகொள்வோமா?

nathan

விட்டமின் ஈ கேப்ஸ்யூலை எப்படி அழகிற்கு உபயோகிப்பது?

nathan