24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
6 hot water1
முகப் பராமரிப்பு

பெண்களே வெள்ளையாகணுமா? அப்ப பாலைக் கொண்டு இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..! !

பால் எப்படி உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறதோ, அதே அளவில் சருமத்திற்கும் வழங்குகிறது. பாலில் உள் வைட்டமின்களான ஏ, டி, பி6 மற்றும் பி12, கால்சியம், புரோட்டீன் போன்றவை சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இவைகள் பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்வதோடு, புதிய சரும செல்களைப் புதுப்பிக்கவும், கொலாஜென் உற்பத்திக்கும், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும், சரும வறட்சியைத் தடுக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

எனவே தான் பல்வேறு சரும பராமரிப்பு பொருட்களில் பால் முக்கியப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பாலை கெமிக்கல் கலந்த க்ரீம்களின் மூலம் சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, நேரடியாக சருமத்திற்குப் பயன்படுத்தினால் பாலின் முழு நன்மைகளையும் பெற முடியும். முக்கியமாக பால் அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் போக்க வல்லது.

இந்த பாலை குடிப்பதன் மூலம் உடலின் உட்பகுதி ஆரோக்கியமாவது போல், சருமத்திற்கு ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவதன் மூலம் சரும அழகை அதிகரித்துக் காட்டலாம். இங்கு பாலை எப்படியெல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தலாம் என கொடுக்கப்பட்டுள்ளது.

#1

பாலை ஃபேஷியல் கிளின்சர் போன்றும் பயன்படுத்தலாம். பச்சை பாலை பஞ்சுருண்டையில் நனைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடு காணப்படும்.

#2

பால் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர். அதிலும் பச்சை பாலை நன்கு கனிந்த வாழைப்பழத்துடன் சேர்த்து, கை, கால் முகத்தில் தடவுவதன் மூலம், சருமத்தில் ஏற்படும் வறட்சி நீங்கி, சருமம் ஈரப்பசையுடனும், பொலிவோடும் இருக்கும்.

#3

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களைப் போக்க பாலைக் கொண்டு அற்புதமான ஸ்கரப் ஒன்றை தயாரிக்கலாம். அதற்கு ஓட்ஸ் பொடி, தேன், வால்நட் பவுடர் ஆகியவற்றை பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரால் பின் கழுவுங்கள்.

#4

சருமத்துளைகளின் ஆழத்தில் தேங்கியுள்ள அழுக்கைப் போக்க பால், தேன், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் மசித்த வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

#5

பாலை டோனர் போன்றும் பயன்படுத்தலாம். அதற்கு பாலுடன் சிறிது க்ரீன் டீ சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவுங்கள். இதனால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதோடு, முதுமைக் கோடுகளும் நீங்கும்.

#6

பாலைக் கொண்டு புத்துணர்ச்சி குளியலைப் போடலாம். அதற்கு பாலுடன், தேன், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை வெதுவெதுப்பான நீர் நிரப்பிய குளியல் டப்பில் சேர்த்து, அதனுள் 15 நிமிடம் அமர வேண்டும். இதனால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, மனம் ரிலாக்ஸ் ஆகி மன அழுத்தமும் நீங்கும்.

#7

பால் சருமத்தில் உள்ள கருமையான படலத்தையும், கரும்புள்ளிகளையும் போக்க உதவும். அதற்கு பாலை உருளைக்கிழங்கு சாற்றுடன் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

#8

பால் முகத்தில் உள்ள மேடு பள்ளங்களைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவுடன், பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம்.

#9

சருமத்தின் நிறத்தை பால் கொண்டு அதிகரிக்க முடியும். அதற்கு பப்பாளி கூழுடன், பாதாம் பேஸ்ட், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இச்செயலால் மாசடைந்த சுற்றுச்சூழலால் அழுக்கான சருமத்தை அழகாக மாற்ற முடியும்.

#10

மசித்த வாழைப்பழத்துடன், பால், ஆளி விதை எண்ணெய் மற்றும் அன்னாசி கூழ் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இந்த மாஸ்க் முகத்தில் உள்ள முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமை தோற்றத்தைக் கொடுக்கும்.

#11

சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்வதற்கு பால் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பாலை எரிச்சல் கொண்ட சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெற்று, முகம் பொலிவோடு இருக்கும்.

#12

அவகேடோ பழத்தின் கனிந்த பகுதியை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள், முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும். மேலும் இந்த ஃபேஸ் பேக்கில் உள்ள இயற்கை எண்ணெய், சருமத் துளைகளை சுத்தம் செய்ய உதவுவதோடு, சரும செல்களுக்கு ஊட்டத்தையும் வழங்கும்.

#13

பால் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்கில் ஏராளமான மருத்துவ பண்புகள் உள்ளது. இந்த இரண்டையும் கொண்டு சருமத்திற்கு மாஸ்க் போடும் போது, அது முகத்தில் உள்ள பருக்களைப் போக்கி, முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்கும்.

#14

ஆரஞ்சு தோலின் பொடியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, நன்கு காய வைத்து, பின் நீர் பயன்படுத்தி மென்மையாக தேய்த்துக் கழுவுங்கள். இந்த மாஸ்க் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்திற்கு நல்ல நிறத்தை வழங்கும்.

Related posts

நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்கான 6 எளிய வழிகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகம் பொலிவாக மிளிர, குளிர்ந்த தண்ணீர் போதும்: நீங்க இதைச் செய்றீங்களா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… முகத்தில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

nathan

தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்

nathan

தெரிஞ்சிக்கங்க…என்றும் இளமையாக தெரிய வேண்டுமா….அப்ப தினமும் செய்யுங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உடனே மேக்கப்பை பொருட்களை மாற்ற வேண்டும் என்பதை அறிய உதவும் 7 அறிகுறிகள்!!!

nathan

முகம் ஜொலிக்கணுமா?

nathan

மங்கு குணமாகுமா?

nathan

காலையில வெள்ளையா தெரிவீங்க… நைட் தூங்கும் முன் இந்த மாஸ்க்கை போடுங்க..

nathan