24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
25 3 facemask
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகத்தின் அழகை அதிகரிக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்குகள்!!!

எல்லோருக்குமே மற்றவர்கள் நம் அழகைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அதற்காக எங்கு செல்லும் போதும், முகத்திற்கு மேக்கப் போட்டு செல்வார்கள். குறிப்பாக பெண்கள் மேக்கப் இல்லாமல் வெளியே வரவே மாட்டார்கள். ஆனால் முகத்திற்கு அளவுக்கு அதிகமாக மேக்கப் போட்டால், அது சருமத்தின் ஆரோக்கியத்தைத் தான் கெடுக்கும். ஆகவே முகத்திற்கு மேக்கப் போட்டு முகத்தின் அழகை அதிகரிக்காமல், இயற்கையாக நம் முகத்தின் அழகை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்.

அதற்கு அவ்வப்போது முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க், ஸ்கரப் என்று செய்ய வேண்டும். அதிலும் வீட்டுச் சமையலறையில் இருக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டே முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தின் ஆரோக்கியம் அதிகரித்து, சருமம் அழகாகவும் பொலிவோடும் இருக்கும்.

சரி, இப்போது முகத்தின் அழகை அதிகரிக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்குகளைப் பார்ப்போம். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஃபேஸ் மாஸ்க்கும் ஒவ்வொரு சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை உடனடியாகத் தரக்கூடியவையாகும்.

முட்டை ஃபேஷியல்

உங்களுக்கு வறட்சியான சருமம் என்றால், முட்டையின் மஞ்சள் கருவை நன்கு அடித்து அதனை முகத்தில் தடவி மாஸ்க் போடுங்கள். ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடுங்கள்.

எலுமிச்சை ஃபேஷியல்

எலுமிச்சை மிகவும் சிறப்பான ஒரு ப்ளீச்சிங் தன்மை நிறைந்த பொருள். எனவே எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுத்து உடனே கழுவிவிட்டு, மென்மையான துணியால் முகத்தை துடைத்து, பின் ஆலிவ் ஆயில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமமானது மென்மையாக இருக்கும்.

கடுகு

கடுகு கூட சரும அழகைப் பராமரிக்க உதவும். ஆனால் கடுகை பயன்படுத்தும் முன் அதனை கையில் தடவி சோதனை செய்து பின் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சிலருக்கு கடுகு அரிப்பை ஏற்படுத்தும். கடுகு மாஸ்க் செய்யும் போது, கடுகை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

தயிர்

சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கவும், சருமத் துளைகளை அடைக்கவும் தினமும் தயிரைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

மயோனைஸ்

சரும அழகைப் பராமரிப்பதில் மயோனைஸ் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் வறட்சியான சருமம் உள்ளவர்கள், மயோனைஸ் உடன் முட்டையை சேர்த்து நன்கு கலந்து, மாஸ்க் போட்டால் நல்ல பலனைக் காணலாம்.

ஓட்ஸ்

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு ஓட்ஸ் தான் மிகவும் சிறப்பான பொருள். அதற்கு ஓட்ஸை பொடி செய்து, பால் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்ய வேண்டும்.

பால்

தினமும் பாலைக் கொண்டு முகத்தை துடைத்து எடுத்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி முகம் பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் கூட அழகைப் பராமரிக்க உதவும் பொருட்களில் ஒன்று. அதற்கு வாழைப்பழத்தை மசித்து, அதனைக் கொண்டு முகத்தை லேசாக மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாம் சருமம் வறட்சியடைவதைத் தடுப்பதோடு, சரும சுருக்கம் ஏற்படுவதையும் தடுக்கலாம்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூளில் பால் சேர்த்து கலந்து அன்றாடம் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் தங்கியுள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, முகம் பளிச்சென்று பொலிவோடு இருக்கும்.

சாக்லெட்

சாக்லெட் சருமத்திற்கு மிகவும் நல்லது. சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் சாக்லெட் ஃபேஸ் மாஸ்க் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது சருமத்தை வறட்சியடையச் செய்வதோடு, அரிப்பை ஏற்படுத்தவும் செய்யும்.

பரங்கிக்காய் ஃபேஷியல்

பரங்கிக்காயில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போட்டால், அது சருமத்திற்கு தேவையான வைட்டமின்களைத் தருவதோடு, சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்கும். அதற்கு இதனை மசித்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

க்ரீன் டீ மற்றும் தேன்

க்ரீன் டீ சருமத்தை மென்மையாக்கவும், தேன் ப்ளீச்சிங் பொருளாகவும் செயல்படுவதால், இவற்றைக் கொண்டு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

திராட்சை மற்றும் தேன்

திராட்சை சாற்றில் தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு மாஸ்க் போட்டால், அது சருமத்தில் உள்ள பருக்களால் வந்த தழும்புகளையும், வடுக்களையும் போக்கி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் சருமத்தை மென்மையாக்க உதவுவதோடு, சருமத்தை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும். ஆகவே தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி

பெரும்பாலான பெண்களுக்கு ஸ்ட்ராபெர்ரி மிகவும் விருப்பமான பழமாக இருக்கும். அத்தகைய ஸ்ட்ராபெர்ரியைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போட்டால், அது முகத்தில் உள்ள சுருக்கங்களையும், முதுமைக் கோடுகளையும் தடுக்கும்.

அவகேடோ

அவகேடோவை தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் முகம் பட்டுப் போன்று வறட்சியின்றி அழகாக இருக்கும்.

Related posts

முகம் பொலிவுடன் மிளிர……..

sangika

உங்க கண்கள் அனைவரையும் ஈர்க்க வேண்டுமா…?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஸ்கின் டானிக்

nathan

பெண்களே! இதோ உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்குகள்!

nathan

உங்களுக்கு சிறந்த‌ 10 ஆரோக்கியமான முக பேஷியல் குறிப்புகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! முகப்பருவை மறைக்க டூத் பேஸ்ட் பயன்படுத்தி விடுங்க!

nathan

பெண்களே பளிச்சென்ற முகம் வேண்டுமா? அப்ப தினமும் ஆவி புடிங்க….

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி முகம் கழுவினால் என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

nathan

முகத்தில் உள்ள கருமையான தழும்புகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள்!!!தெரிந்துகொள்வோமா?

nathan