* தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து, கண்களை சுற்றி தேய்த்தால் கருவளையம் மறையும்.
* நேந்திரம் பழத்தை கூழாக்கி அதை கண்களை சுற்றி பூசவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கும்.
* கஸ்தூரி மஞ்சள், ரத்த சந்தனம் ஆகியவற்றை சம அளவில் கலந்து தினமும் பூசி வந்தால் கண்களின் கீழே உள்ள கறுப்பு வளையம் மாறும்.
கருவளையங்களை போக்க சில டிப்ஸ்
1. அநேகமாக எல்லோருக்கும் தெரிந்தது, வெள்ளரிக்காயை உபயோகிப்பது. மெல்லிய வட்டங்களாக நறுக்கி, டைரக்டாக கண்களின் மேல் 15 நிமிடமாவது வைத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தால் ஏற்படும் கருவளையங்களுக்கு வெள்ளரிக்காய் நல்லது.
2. ஜாதிக்காயை அரைத்து பூசலாம். பாதாம் பருப்பை பாலில் அரைத்தும் கண்களை சுற்றி போடலாம்.
3. பஞ்சு துண்டுகளை பன்னீரில் நனைத்து கண்களின் மேல் போடலாம்.
4. எலுமிச்சம் சாற்றை கண்களை சுற்றி கருவளையங்கள் மேல் தடவ அவை மறையும். முழங்கை, முழங்கால்களில் தோன்றும் கருமையை போக்கவும் எலுமிச்சை சாற்றை உபயோகிக்கலாம். தக்காளிச் சாற்றையும் உபயோகிக்கலாம்.
5. சீரான உணவு – வறுத்த, பொரித்த உணவுகளை விட, ‘கூட்டு’ போன்ற வேக வைத்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
6. அதிகமாக தண்ணீர் குடிக்கவும்.
7. பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.
8. உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளவும்.
9. மலச்சிக்கலை தவிர்க்கவும்.
10. வைட்டமின் ‘இ’ எண்ணையால் கண்களை சுற்றி மசாஜ் செய்யவும். இதை தினசரி படுக்குமுன் செய்யவும்.
11. நன்றாக 7 மணிநேரம் தூங்கவும்.
12. உருளைக்கிழங்கை துருவி சாறு எடுத்தக் கொள்ளவும். தினமும் கருவளையத்தின் மீதிபூசி, 15 நிமிடம் காய்ந்த பின் கழுவவும், தோலுடன் கூடிய உருளைகிழங்கின் துண்டுகளையும் கருவளையத்தின் மீது 15 நிமிடம் வைத்துக் கொள்ளலாம்.
13. உபயோகித்த டீத்தூள் அடங்கிய சிறிய பைகளால் கண்களை சுற்றி ஒத்தடம் கொடுக்கலாம்.
14. டென்ஷனை குறைக்கவும், யோகா பயில்வது பலனளிக்கும்.