28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
oliveoil
சரும பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் விளக்கெண்ணெய்!!!

என்ன தான் க்ரீம்கள், ஜெல், லோஷன்களைப் பயன்படுத்தினாலும், சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதில்லை. ஆனால் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களை விட, இயற்கைப் பொருட்களைக் கொண்டு சரும பிரச்சனைகளுக்கு தீர்வை கண்டால், உடனடி நிவாரணத்தைப் பெறலாம். அதிலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சமையலறையில் உள்ள விளக்கெண்ணெய் மிகவும் சிறப்பான பொருள்.

முகப்பரு, வறட்சியான சருமம், ஸ்ட்ரெட்ச் மார்க் மற்றும் சூரியக்கதிர்களால் சருமத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு விளக்கெண்ணெய் நல்ல தீர்வை வழங்கும். ஏனெனில் அதில் ஆன்டி-செப்டிக் மற்றும் கிளின்சிங் தன்மை நிறைந்திருப்பதால், இது சருமத்தில் ஏற்படும் அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வைத் தரும்.

சரி, இப்போது விளக்கெண்ணெய் கொண்டு எந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வைக் காணலாம் என்று பார்ப்போம்.

முகப்பரு

முகப்பரு வந்தால் சருமத்தில் அரிப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படும். இதனாலேயே பருக்கள் முகத்தில் பரவிவிடும். பருக்கள் அதிகமாகாமல் இருக்கவும், அவற்றால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு விளக்கெண்ணெயை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து, 1 மணிநேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், பாக்டீரியாக்கள் மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, பருக்கள் வருவது தடுக்கப்படும்.

சிறந்த கிளின்சர்

விளக்கெண்ணெயை சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இதற்கு அதில் உள்ள கிளின்சிங் தன்மை தான். ஆகவே தினமும் விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை துடைத்து எடுத்தால், முகம் பொலிவோடு பளிசென்று மின்னும்.

மென்மையான சருமம்

விளக்கெண்ணெய் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன் விளக்கெண்ணெய் கொண்டு முகத்தை துடைக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமம் மென்மையாவதை நன்கு காணலாம்.

டாக்ஸின்களை வெளியேற்றும்

உடலில் டாக்ஸின்கள் அதிக அளவில் இருந்தால் தான் சருமமானது பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும். ஆகவே சமையலில் விளக்கெண்ணெயை பயன்படுத்துவதோடு, வாரம் மூன்று முறை அதனைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், முகம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் காணப்படும்.

குதிகால்

சிலருக்கு குதிகால் வெடிப்பு அதிகமாக இருக்கும். அத்தகையவர்கள், வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அதில் சிறிது விளக்கெண்ணெய் ஊற்றி, அதனுள் பாதங்களை ஊற வைத்து பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் பாதங்கள் நன்கு மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

Related posts

தயிர் தேனில் செய்யும் இந்த அழகுக் குறிப்பு உங்கள் முகத்தில் ஒரு சில நாட்களில் வசீகரத்தை உண்டு பண்ணும்

nathan

நீங்கள் அதிகமா மேக்கப் போடுறீங்களா? கவணம் உங்க சருமத்துக்கு ஆபத்து !

nathan

tighten skin after weight loss… எடை குறைவுக்கு பின் சருமம் சுருக்கமா தெரியுதா?

nathan

சருமப் பராமரிப்பு

nathan

உடலில் ஏற்படும் காயங்கள், பெண்களின் கர்ப்பக்காலத்தில் வயிற்றின் விரிவு மற்றும் உடல் பருமன் அதிகரித்தல் போன்ற காரணங்களால் ஏற்பட்ட  தழும்புகளை மறையச்செய்யலாம்.

nathan

அழகின் பெயரால் அரங்கேற்றப்படும் அபத்தங்கள்!

nathan

தக்காளி தரும் தங்க நிறம்!…

nathan

கொள்ளை கொள்ளும் அழகை எப்படி கேரளத்து பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது புதிரான கேள்வியாக உங்கள் மனதில் இருந்தால், அதற்கான பதில்!….

sangika

அழகுக்கு ஆப்பிள் பழம்

nathan