28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
காரமான தக்காளி மீன் குழம்பு
அசைவ வகைகள்

சுவையான தக்காளி மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

மீன் – 6-7 துண்டுகள்

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி – 6 (அரைத்தது)

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 6-8 பற்கள்

கறிவேப்பிலை – சிறிது

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது

புளி – 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகலமான மற்றும் தட்டையான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையை சேர்த்து வறுத்து, பின் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வறுத்து, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 8-10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து, அதில் மிளகாய் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அதின் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் மீனை வேக வைக்க வேண்டும். மீனானது நன்கு வெந்ததும், அதில் புளிச்சாறு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், காரமான தக்காளி மீன் குழம்பு ரெடி!!காரமான தக்காளி மீன் குழம்பு

Related posts

சூப்பரான சைடு டிஷ் புதினா இறால் மசாலா

nathan

உருளைக்கிழங்கு ஆம்லெட்

nathan

சுவையான மசாலா மீன் ப்ரை

nathan

சூப்பரான காரைக்குடி நண்டு மசாலா

nathan

சிக்கன் லாலிபாப் / Chicken Lollipop

nathan

சிக்கன் கோழி பிரியாணி

nathan

ப்ரைடு சிக்கன்

nathan

நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

சைனீஸ் ஸ்டைல் மட்டன் சாப்ஸ்

nathan