25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1476258745 8909
தலைமுடி சிகிச்சை

தெரிஞ்சிக்கங்க…இளநரையை போக்கும் மூலிகை தைலம்

இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது.  இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர்.போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.இளநரை போக்க மூலிகை எண்ணெய்:தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
கறிவேப்பிலை – 2 இணுக்கு
கொத்தமல்லலி – சிறிதளவு
நெல்லி வற்றல் – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.1476258745 8909

Related posts

பளபளப்பான மற்றும் வலிமையான கூந்தலை பெற

nathan

உங்களுக்கு எவ்வளவு தலைக்கு குளிச்சாலும் முடி எண்ணெய் பிசுக்காவே இருக்கா? இதை முயன்று பாருங்கள்!

nathan

நரை முடியை வளரவிடாமல் செய்யும் மூலிகை எண்ணெய் – பாட்டி சொன்ன வைத்தியம்!!

nathan

உங்கள் சருமம் மற்றும் முடியை இயற்கையாக பாதுகாப்பது எப்படி!

nathan

இதை செய்யுங்கோ..!! தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியமா.?

nathan

தலைக்கு குளிக்கும் போது நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள்!!!

nathan

தினமும் கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டுமா?

nathan

தலை முடி உதிர்கின்றது என்ற கவலையா? பாட்டி வைத்தியம்

nathan

எப்படி பயன்படுத்துவது.?! பொடுகைப் போக்கும் எலுமிச்சை..!

nathan