25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
5afa0843 25d3 47ed b1d7 5e21af79d18e S secvpf
அலங்காரம்

பெண்களுக்கு அழகு தரும் தாவணி, ரெட்டைஜடை, மல்லிகைப்பூ

அழகு, பெண்கள் என்றாலே அழகு தான். பெண்களின்றி கவிதைகளோ, காவியங்களோ சாத்தியமற்றவை. பெரும்பாலான இலக்கியவாதிகள் ஆண்களாக இருந்தாலும், அவர்கள் எழுதிய இலக்கியங்களுக்கு பின்புலமாகவும், பின் பலமாகவும் இருந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள் தான்.

பெண்கள் இந்தியாவின் மாபெரும் சக்தி. எத்தனை ஆண் பிரதமர்கள் பதவியேற்றாலும், இந்திராகாந்தி என்ற ஓர் இரும்பு பெண்மணி தான் முன்னிலையில் இருப்பவர். இப்படிப்பட்ட இந்தியாவில் பெண்களின் உண்மை அழகு அழிந்து வருகிறது என்றால் அது மிகையாகது.

நெற்றி வகுடு முதல் கால் கொலுசு வரை இந்திய பெண்களின் அழகு அனைத்திலும் நிறைந்திருந்தது. ஆனால், இன்றைய மேற்கத்திய நாகரிகத்தின் ஆதிக்கம் மற்றும் அல்ட்ரா மாடர்ன் வாழ்வியல் முறை அனைத்தையும் சிதைத்துக் கொண்டு வருகிறது..

ரெட்டை ஜடை:
பள்ளி பருவத்தை நினைவூட்டுகிறது. இரட்டை ஜடை பின்னி, இரு ஜடைகளையும் இணைக்கும் மல்லிகை பூ பாலம். அதன் அழகு. அய்யோ, அரும்பு மீசை இளசுகளை பயணிக்க தூண்டும் அழகு அல்லவா அது. இன்று ஒற்றை ஜடை பின்னுவதை காணவே கனா காண வேண்டும் போல. தூக்கி வாரி ஆண்களை போல திரிகின்றனர் பெண்களும்.

மஞ்சள் பூசிய முகம்:
மஞ்சள் என்றாலே வெள்ளிக்கிழமை தான் ஞாபகத்திற்கு வரும். அன்றைய நாட்களில் ஏதோ ஓர் எக்ஸ்ட்ரா சந்தோஷம் காரணமே இல்லாமல் பூக்கும். மஞ்சளில் இருந்த மகத்துவம் அறிந்து தான், பெண்களுக்கு சரும பிரச்சனைகள் வராமல் இருக்க, முன்னோர் மஞ்சள் பூசி குளிக்க கூறினர். இன்று மஞ்சளின் நற்குணம் இருக்கிறது என்று விற்கப்படும் பூச்சுகளை வாங்கு போசிக்கொள்ளும் பெண்கள், மஞ்சள் பூச தயங்குகிறார்கள்.

பாவாடை தாவணி:
இது தமிழ்நாட்டு பெண்களின் ஆழகை அதிகரித்து காட்டும் உடை. இன்று ஏதேனும் பண்டிகை நாட்களில் மட்டும் தான் அணிகின்றனர். உண்மையிலேயே கல்லூரிகளிலும், பண்டிகை நாட்களிலும், ஆண்கள் எப்போது பெண்கள் பாவாடை தாவணி அணிந்து வருவார்கள் என்று ஏங்குவது உண்டு. ஆனால், இன்றைய பெண்களுக்கு புடவை, பாவாடை தாவணி அணியவே மறந்து வருகிறார்கள் என்பது தான் நிதர்சனம். (ஒரு சிலரை தவிர)

இடையாடும் நடையழகு:
நீங்கள் 80-களில் வெளிவந்த திரைப்படங்களை கண்டால், கண் கூட பார்க்கலாம் இந்த இடையாடும் நடையழகை. இன்று பூனை நடை நடக்கிறேன், ஹீல்ஸ் அணிந்து நடக்கிறேன் என்று, அந்த நடை பழக்கத்தையே மறந்துவிட்டனர் நம் நாட்டு பெண்கள். மனதை கொள்ளையடித்து செல்லும் அழகு அந்த இடையாடும் நடையழகு.

கால் கொலுசுகள்:
மணிகள் தொங்கும் அந்த கால் கொலுசுக்கு பெண்கள் அடம்பிடித்த காலம் மலையேறிவிட்டது. பிளாஸ்டிக் கொலுசுகளை விரும்பு அணிகின்றனர் இன்றைய பெண்கள். அது பார்ப்பதற்கு மட்டும் தான் அழகு. ஆனால், பழைய மணி கொலுசுகள் குருடனை கூட மெய் சிலிர்க்க வைக்கும் சத்தம் எழுப்பும்.

கை வளையல்கள்:
வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் கை வளையல்கள் அணிவதை தவிர்த்து வருகிறார்கள். கேட்டால் கணினியில் வேலை செய்யும் போது இடையூறாக இருக்கிறதாம். அதுவும் சரிதான். ஆனால், அதற்கென இருந்த தனி அழகை இழந்துவிட்டீர்கள் பெண்களே!!!

வட்டமான குங்கும பொட்டு:
குங்குமம் வைப்பதிலேயே வேறுப்பட்டு இருக்கும் அந்த பழைய வட்டமாக வைக்கும் குங்கும பொட்டு, அம்மன் பட ரம்யா கிருஷ்ணன் மாதிரி பெரியாதாக இல்லாவிட்டாலும் சிறிய அளவில் வைத்துக்கொண்டு சுண்டி இழுக்கும் அழகு அந்த வட்டமான குங்கும பொட்டில் இருக்கும். மற்றும் வாட்டமான முகங்களை கூட அந்த பொட்டு புத்துணர்ச்சியாக காட்டும். இன்று பல பெண்கள் ஸ்டிக்கர் பொட்டுகளை கூட வைப்பதில்லை. பிறகு எங்கே வட்டமான குங்கும பொட்டை எதிர்பார்ப்பது.

நேர் எடுத்த வகிடு:
நேர் எடுத்த வகிடும், தலையின் இரு ஓரங்களிலும் அருவியை போல சரியும் கூந்தலும் சொல்லில் அடங்காத அழகு. என்னதான் மணிக்கணக்கில் செலவழித்து டிசைன், டிசைனாக முடி வாரினாலும், இதற்கு ஈடாகுமா!!!

கொலுக்கு முழுக்கு உடல் வாகு:
கொஞ்சம் சதைப் போட்டால் கூட கண்ட டயட்டும், பட்டினியாக இருந்தும் உடல் மெலிந்து விடுகிறார்கள். ஆனால், பெண்களுக்கு அழகே அந்த கொலுக்கு முழுக்கு உடல் வாகு தான். மற்றும் இந்த உடல் வாகு தான் பிரசவிக்கும் போதும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க தவிர்க்கும். ஒல்லியாக இருப்பது அழகல்ல, நோய்!!!

வெட்கப்படும் பார்வை:
பெண்கள் மொத்தமாக வெட்கப்படுவதே இல்லை என்றெல்லாம் இல்லை. ஆனால், அவ்வப்போது அவர்கள் ஆண்கள் மீது தூவும் அந்த வெட்கப்படும் பார்வை தொலைந்துவிட்டது என்பது தான் ஆண்களின் குமுறல்கள்!!! இது ஆண்களின் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து, காதலை வளர்க்கும் உரம் என்று எப்படி வேண்டுமானலும் கூறலாம்.

5afa0843 25d3 47ed b1d7 5e21af79d18e S secvpf

Related posts

கன்னங்களின் அழகான ஒப்பனைகளுக்கான 5 முக்கிய குறிப்புகள்

nathan

சூப்பர் டிப்ஸ் ப்ரேட் டெனிம் ஜீன்ஸை நாமே உருவாக்கலாம்

nathan

பெண்களே! புகுந்த வீட்டில் அனைவரையும் உங்கள் கைகளுக்குள் வைத்திருக்க வேண்டுமா? இதோ சில வழிகள்!

sangika

மணப்பெண்க்கு டிப்ஸ்

nathan

அழகு குறிப்புகள்:முதன்முறையா மேக்கப்!

nathan

வளையல் வண்ண வளையல்!!

nathan

பெண் குழந்தைகளுக்கு புதிய பெஸன்!

sangika

இன்றைய பெண்கள் விரும்பும் பிராண்டட் நகைகள்

nathan

வினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா?

sangika