22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
சத்தான கோதுமை ரவா தோசை
சிற்றுண்டி வகைகள்

சத்தான கோதுமை ரவா தோசை

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – முக்கால் கப்,
அரிசி மாவு – கால் கப்,
கோதுமை ரவை – அரை கப்,
புளித்த மோர் – ஒரு கரண்டி,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று,
இஞ்சி – சிறு துண்டு,
கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.

• அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லைப் வைத்து சூடானதும் சிறிது எண்ணெயை தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, முறுகலாக எடுத்துப் பரிமாறவும்.

• சுவையான சத்தான கோதுமை ரவா தோசை ரெடி.http://mmimages.maalaimalar.com/Articles/2015/Sep/592ad124-f624-48d1-8165-9939d59c67d0_S_secvpf.gif

Related posts

உளுந்து வடை

nathan

எக் நூடுல்ஸ்

nathan

அவல் வெஜ் புலாவ்

nathan

அன்னாசி பச்சடி

nathan

சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்தி

nathan

மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ்

nathan

அதிரசம் என்ன அதிசயம்?

nathan

இடியாப்ப பிரியாணி

nathan

கருப்பட்டி இட்லி

nathan