15577
அசைவ வகைகள்

சூப்பரான இறால் தொக்கு செய்ய

தேவையான பொருட்கள்

இறால் – 1/2 கிலோ
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 2 நடுத்தரமானது
இஞ்சி அரைத்து – 1/2தேக்கரண்டி
பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். அது சூடானவுடன் சோம்பு போடவும். லேசாக நிறம் மாறியதும் வெங்காயம் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போடவும். நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை போடவும் பச்சை வாசனை போக வதங்கியதும் தக்காளியை போடவும்.

தக்காளி போட்டதும் அதனுடன் உப்பு, மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் அதில் இறாலை போடவும் பத்து முதல் 15 நிமிடங்கள் வதக்கினால் போதும். இறக்கும்போது மிளகுத்தூள் சோம்புத்தூள் போட்டு கிளறி விடவும். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான இறால் தொக்கு தயார்

Related posts

ஸ்பைசியான இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி

nathan

சுவையான க்ரீன் சிக்கன் கிரேவி

nathan

வெங்காயம் சிக்கன் ஃப்ரை

nathan

கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா

nathan

மட்டன் சில்லி ஃப்ரை

nathan

சூப்பரான மீன் குருமா செய்வது எப்படி

nathan

எவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது.

nathan

வஞ்சரம் மீன் ப்ரை – சன்டே ஸ்பெஷல்!

nathan

முட்டை தோசை

nathan