நம்மில் பலருக்கும் முகத்தில் பருக்களால் வந்த தழும்புகள் மற்றும் அதிகப்படியான சரும வறட்சியால் ஏற்படும் சரும சுருக்கங்கள் இருக்கும். இவை முகத்தின் அழகைக் கெடுப்பதுடன், சில நேரங்களில் தன்னம்பிக்கையை இழக்க வைக்கும். இதற்காக கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தாமல், வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வாருங்கள்.
இதனால் சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, சரும செல்கள் ஆரோக்கியம் ஊக்குவிக்கப்பட்டு, சரும அழகும் மேம்படும். சரி, இப்போது அழகைக் கெடுக்கும் வகையில் முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கும் அற்புத பேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்: தேன் – 1 டீஸ்பூன் ஜாதிக்காய் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் பட்டை தூள் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை #1 முதலில் அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை சென்சிடிவ் சருமம் உள்ளவர்களாக இருந்தால், சற்று அதிகமாக தேன் சேர்த்துக் கொள்ளவும்.
செய்முறை #2 வேண்டுமானால், இந்த கலவையுடன் சிறிது வெள்ளை அல்லது பச்சை நிற க்ளே சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஓரளவு நீர்மமாக கலந்து கொள்ளுங்கள்.
செய்முறை #3 பின்பு தயாரித்து வைத்துள்ள கலவையை கண்களைச் சுற்றிய பகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் தடவிக் கொள்ள வேண்டும்.
செய்முறை #4 10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதனைத் தொடர்ந்து குளிர்ந்த நீரில் முகத்தை மீண்டும் கழுவ வேண்டும்.
செய்முறை #5 இறுதியில் சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்சுரைசர் எதையேனும் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
குறிப்பு இந்த மாஸ்க்கை முகத்தில் மட்டுமின்றி, கை, கால்களிலும் போடலாம். இப்படி வாரத்திற்கு 1 முறை போட்டு வந்தால், முகத்தில் உள்ள தழும்புகள், சுருக்கங்கள் போன்றவை விரைவில் மறைந்துவிடும்.