அழகை அதிகரித்து காட்டுவதில் கூந்தல் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் தற்போது பலரும் தங்களில் கூந்தலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதனால் கூந்தல் மென்மையிழந்து, வறட்சியுடன் அசிங்கமாக காணப்படுகிறது.
இந்நிலைக்கு தீர்வளிக்கும் வண்ணம் கடைகளில் கண்டிஷனர்கள் கிடைக்கின்றன. இந்த கண்டிஷனர்கள் கூந்தலின் மென்மைத்தன்மையை அதிகரித்து, அழகாகக் காட்டும். ஆனால் கூந்தலை மென்மையாக வைத்துக் கொள்ள, கண்டிஷனர்களை மட்டும் பயன்படுத்தினால் போதாது. வேறு சிலவற்றையும் பின்பற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் சிலருக்கு கண்டிஷனர்களைப் பயன்படுத்த தெரியாது.
இங்கு முடியை பட்டுப்போன்று மென்மையாக பராமரிக்க பின்பற்ற வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
டிப்ஸ் #1
முதலில் கூந்தலுக்கு ஏற்ற சரியான ஹேர் கண்டிஷனர்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் கூந்தலில் எண்ணெய் பசை அதிகம் இருப்பவர்களுக்கு வேறு கண்டிஷனர்களும் மற்றும் வறட்சியான கூந்தலை உடையவர்களுக்கு வேறு கண்டிஷனர்களும் இருக்கும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால் இல்லாத கண்டிஷனர்களை வாங்கிப் பயன்படுத்துங்கள்.
டிப்ஸ் #2
தலைக்கு குளித்த உடனேயே வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சூரியக்கதிர்களால் கூந்தல் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.
டிப்ஸ் #3
தலைக்கு குளிக்கும் முன் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனால் கூந்தல் அதிகம் வறட்சியடைவதைத் தடுக்கலாம்.
டிப்ஸ் #4
தலைக்கு ஷாம்பு போட்ட பின்னர், நீரில் ஸ்கால்ப்பை நன்கு அலச வேண்டும். பின் முடியின் முனைகளில் கண்டிஷனர்களைப் பயன்படுத்த வேண்டும். இதனால் முடியின் முனைகள் மென்மையடையும்.
டிப்ஸ் #5
கூந்தல் மென்மையாக இருப்பதற்கு தலைக்கு வெறும் கண்டிஷனரைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. தினமும் தவறாமல் எண்ணெய் தடவ வேண்டும். இதனால் கூந்தல் வறட்சியடைவது தடுக்கப்படும்.
டிப்ஸ் #6
கூந்தலை சீவும் போது, ஒட்டுமொத்த கூந்தலையும் எடுத்து சீவுவதற்கு பதிலாக, பாகங்களாகப் பிரித்து மெதுவாக சிக்குகளை நீக்க வேண்டும். இதனால் முடி கொத்தாக வெளிவருவதைத் தடுக்கலாம்.
டிப்ஸ் #7
கண்டிஷனரை கூந்தலுக்கு தடவிய பின் 5 நிமிடங்களாவது ஊற வைக்க வேண்டும். கண்டிஷனரைத் தடவிய உடனே தலைக்கு நீரை ஊற்றினால், பின் கண்டிஷனரின் பலனைப் பெற முடியாது.