என்னென்ன தேவை?
கடலைப்பருப்பு 1 கப்,
உருண்டை வெல்லம் 1 கப் (நசுக்கியது),
ஏலக்காய் 4,
துருவிய தேங்காய் 1/2 கப்,
நெய் 1 கரண்டி.
எப்படிச் செய்வது?
கடலைப் பருப்பை மெத்தென்று வேகவைத்து, தண்ணீரை வடித்து வைக்கவும். மசிக்க வேண்டாம். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். உருண்டை வெல்லத்தை நன்கு நசுக்கி, ஒரு கரண்டி தண்ணீரில் கரைய விட்டு, கடாயை அடுப்பில் வைத்து வெல்ல நீரை விட்டுக் கொதித்ததும் வடிகட்டிக் கொள்ளவும். மீண்டும் வெல்ல நீரை கடாயில் விட்டு பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும். இதில், வெந்த கடலைப் பருப்பு, துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும். நெய் சேர்த்துக் கிளறி, கெட்டியானதும் நைவேத்தியம் செய்யவும்.