தேவையான பொருட்கள்
- பொடித்த சீனி- 250 கிராம்
- வெண்ணெய்- 250 கிராம்
- முட்டை-4
- மைதா மாவு- 250 கிராம்
- பேக்கிங் பவுடர்- 2 டீஸ்பூன்
- ஆரஞ்சு எஸென்ஸ் அல்லது ரோஸ் எஸென்ஸ்- 2 ஸ்பூன்
செய்முறை
- வெண்ணெயை குளிர்சாதப்பெட்டியிலிருந்து எடுத்து room temperatureல் வைக்கவும். அது மிருதுவான பதத்துக்கு வரும்போதுதான் கேக் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
- சீனியை நன்கு மாவாகப் பொடித்துக் கொள்ள வேண்டும்.
- மாவையும் பேக்கிங் பவுடரையும் கலந்து மூன்று முறை சலிக்கவும்.
- முட்டைகளை தனியாகப் பிரித்தெடுக்கவும். முதலில் முட்டை வெள்ளைகளை சிறிதுகூட மஞ்சள் கரு கலப்பில்லாது எடுத்து வைக்கவும்.
- பிறகு அவற்றை egg beater அல்லது electronic beaterல் நன்கு அடிக்கவும். அடிக்க அடிக்க முட்டை வெள்ளை கட்டித் தயிர்போல திரண்டு வரும். இறுதியில் கட்டியான பாளம்போல தயிர் பதத்தில் வந்ததும் அடிப்பதை நிறுத்தவும்.
- ஒரு அகன்ற க்ளாஸ் பாத்திரம் எடுத்து இளகலான வெண்ணெய், சீனியைப் போட்டு நன்கு அடிக்கவும். அல்லது electronic beaterலும் இதை மட்டும் நன்கு நுரை வர அடிக்கவும்.
- பிறகு முட்டை வெள்ளையை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து ஒரு ஸ்பாட்டுலாவால் மிருதுவாக கலக்கவும். பின் அடித்த மஞ்சள் முட்டை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கலக்கவும்.
- அதன் பிறகு மாவை ஒவ்வொரு கரண்டியாக சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
- இறுதியில் எஸ்ஸென்ஸ் சேர்த்து கலந்து கேக் ட்ரேயில் ஊற்றி பரப்பவும்.
- ஏற்கனவே சூடாக்கப்பட்ட அவனில் வைத்து 160 டிகிரி C-யில் சுமார் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
- பிறகு 10 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து ஆற வைத்து விரும்பிய வண்னம் துண்டுகள் செய்யவும்.