cf0f3521 9d72 4019 9014 e137652e2715 S secvpf
ஐஸ்க்ரீம் வகைகள்

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் செய்முறை

தேவையான பொருட்கள்

பால்
சர்க்கரை-500 கிராம்
கார்ன்ஃப்ளார்-200 கிராம்
ஜெலட்டின்-1 டேபிள்ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் (தேவைப்பட்டால்)-1 டீஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி பழங்கள்- சிறிது
ஸ்ட்ராபெர்ரி எசென்ஸ்

செய்முறை

* பாலை அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும் சர்க்கரை சேர்த்து மறுபடி காய்ச்சவும். ஆறிய பால் சிறிது எடுத்து அதில் கார்ன்ஃப்ளார் கலந்து தனியே வைக்கவும்.

* தண்ணீரில் ஜெலட்டினை கரைத்து அடுப்பில் 2 நிமிடங்கள் வைத்து அதில் கொதித்துக் கொண்டிருக்கிற பால் கார்ன்ஃப்ளார் சேர்க்கவும்.

* கார்ன்ஃப்ளார் வெந்து கலவை ஓரளவு கெட்டியானதும் இறக்கி ஆற விடவும்.

* ஆறியதும் எசென்ஸும் ஃப்ரெஷ் கிரீமும் சேர்த்து, மிக்சியில் விப்பர் பிளேடில் ஒரு சுற்று ஓட விட்டு பொடியாக நறுக்கிய அல்லது அரைத்த ஸ்ட்ராபெர்ரி சேர்த்துக் கலந்து 2 மணி நேரங்களுக்கு ஃப்ரீசரில் குளிர வைக்கவும்.

* ஐஸ்கிரீம் நன்கு செட் ஆனதும் பரிமாறவும்.

cf0f3521 9d72 4019 9014 e137652e2715 S secvpf

Related posts

கஸ்டர்டு ஐஸ் க்ரீம்

nathan

சாக்லெட் புடிங்

nathan

பிரெட் ஐஸ்கிரீம்

nathan

குழந்தைகளுக்கான கிவி – பைனாப்பிள் ஐஸ்க்ரீம்

nathan

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம்

nathan

வெனிலா ஐஸ்க்ரீம்

nathan

தேன் ஐஸ்கிரீம்

nathan

வீட்டிலேயே செய்யலாம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்

nathan