sl4647
சிற்றுண்டி வகைகள்

ஸ்டீம்டு அண்ட் ஃப்ரைடு மணி பேக்

என்னென்ன தேவை?

மேல் மாவுக்கு…

மைதா மாவு அல்லது கோதுமை மாவு – 200 கிராம்,
உப்பு – 1/4 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்,
வெதுவெதுப்பான வெந்நீர் – 1/4 டம்ளர்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

ஃபில்லிங் செய்ய…

ப்ரோஸன் பட்டாணி (Frozen) – 1/4 கப்,
துருவிய முட்டைகோஸ் – 1/4 கப்,
பொடியாக அரிந்த பீட்ரூட் – 1/4 கப்,
சிவப்பு குடைமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1, வெங்காயம் – 1 டேபிள்ஸ்பூன்,
பூண்டு – 2 பல்,
சர்க்கரை – 2 சிட்டிகை,
உப்பு – தேவைக்கு,
கருப்பு மிளகு – 1/2 டீஸ்பூன் (கரகரப்பாக பொடித்தது),
லெமன் ஜூஸ் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மேல்மாவு செய்ய…

வெந்நீரில் உப்பு, சர்க்கரை, எண்ணெய் சேர்த்து மாவில் ஊற்றி நன்கு குழைத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

ஃபில்லிங்…

ஒரு நான்ஸ்டிக் தவாவில் எண்ணெய் ஊற்றி காயவைத்து வெங்காயம், பூண்டு வதக்கி, பின் பட்டாணி சேர்த்து வதக்கி ஒரு நிமிடம் வேக விடவும். பிறகு முட்டைகோஸ், பீட் ரூட், பச்சை மிளகாய், வெங்காயம், கேரட், குடைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, 2 ஸ்பூன் தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேகவிடவும். கடைசியாக மிளகு தூள், சர்க்கரை, லெமன் ஜூஸ் சேர்த்து பிரட்டி, இறக்கி ஆற விடவும். குழைத்த மாவை சிறிய பூரி அளவு உருண்டைகளாக எடுத்து, வட்டவடிவமாக பூரி போல் வட்டமாக இட்டு நடுவில் ஃபில்லிங்கை 1 ஸ்பூன் அளவு வைத்து ஸ்ப்ரிங் ரோலாகவோ, சோமாசி அல்லது வாண்ட்டண்ஸ், மணி பேக் போன்ற வடிவில் செய்யலாம். அனைத்து உருண்டைகளையும் இதுபோல் ரெடி செய்து கொள்ளவும். ரெடி செய்து வைத்த அனைத்தையும் எண்ணெயை சூடாக்கி பொரித்து எடுக்கவும். இதை இட்லி பானையில் வேகவைத்தும் செய்யலாம்.
கெட்சப்புடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.sl4647

Related posts

சம்மரை சமாளிக்க… குளுகுளு ரெசிப்பி! tamil recipes

nathan

சுவையான சத்தான பசலைக்கீரை தோசை

nathan

குழந்தைகளுக்கு சத்தான பொட்டுக்கடலை லட்டு

nathan

தந்தூரி பேபி கார்ன்

nathan

சிறுதானிய அடை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்…

nathan

சூப்பரான ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம்

nathan

வெஜ் சமோசா செய்ய இதை பாருங்க….

nathan

கரட் போளி செய்வது எப்படி?

nathan

கோதுமை பிரட் முட்டை உப்புமா

nathan