31.2 C
Chennai
Tuesday, Nov 5, 2024
Healt

ஷாக் ஆகாதீங்க…! அதிக நேரம் மொபைல், கணினி பார்ப்பவரா நீங்கள்… அப்போ இந்த பிரச்சனை உங்களுக்கு கண்டிப்பாக இருக்கும்!!!!

கணினி மற்றும் போனை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு கண்கள் ஈரப்பதத்தை இழந்து வறண்டு காணப்படும். இதனால் பல பிரச்சனைகள் உண்டாகலாம். வறண்ட கண்கள் வருவதற்கு முன் கண்களில் எரிச்சல், அரிப்பு, கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுவது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

இது பல காரணங்களால் ஏற்படும். கண்களில் ஏற்படும் அலெர்ஜி, இதற்கு முன் கண்களில் ஏதேனும் அறுவை சிகிச்சை நடைபெற்றிருத்தல், ஒரு சில மருந்துகள், வயது அல்லது கண்களை அதிக நேரத்திற்கு சிமிட்டாமல் இருப்பது போன்ற காரணங்களால் கண்களில் வறட்சி ஏற்படலாம். இதனை சரி செய்ய தகுந்த வீட்டு மருத்துவங்கள் உண்டு. அவற்றை பற்றி இந்த பதிவில் காண்போம்.

◆வைட்டமின் D:

வைட்டமின் D குறைபாடு உள்ள நபர்களுக்கு கண்களில் வறட்சி ஏற்படுதல் சுலபமாக நடைபெறும். இதனை சரி செய்ய வைட்டமின் D மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சீஸ், சால்மன், ட்யூனா போன்ற மீன்கள், விதைகள், முட்டையின் மஞ்சள் கரு, வால்நட் மற்றும் நட்ஸ் ஆகியவற்றில் வைட்டமின் D அதிகமாக உள்ளது.

◆கண்களை அடிக்கடி சிமிட்டுங்கள்:

ஒரு சில வேலைகளை செய்யும் போது இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக கணினி, மொபைல்களில் வேலை பார்க்கும் போது அல்லது தொலைக்காட்சி பார்க்கும் போது அவ்வப்போது இடைவெளி எடுத்து கண்களை சிமிட்டுங்கள். இது கண்களுக்கு தேவையான ஈரபதத்தை மீட்டு கொடுக்கும்.Healt

◆தண்ணீர் பொருட்கள்:

அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்:

கண்களில் வறட்சி காணப்பட்டால் நாள் முழுவதும் அதிகமான தண்ணீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் தவிர்த்து இளநீர், பழச்சாறு, எலுமிச்சை ஜூஸ், மில்க் ஷேக் ஆகிய தண்ணீர் பொருட்களையும் பருகி வர வேண்டும்.

◆சூடான ஒத்தடம்:

கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் கண்களை ரிலாக்ஸ் செய்யவும் சூடான ஒத்தடம் வையுங்கள். இதனை ஒரு நாளைக்கு இரண்டில் இருந்து மூன்று முறை செய்ய வேண்டும். கண்களை குழந்தைக்கு பயன்படுத்தும் ஷாம்பூ அல்லது குறைந்த வீரியம் கொண்ட ஷாம்பூக்களினால் கழுவி வரலாம். இது கண்களின் கண்ணீர் கிளான்டில் உள்ள எண்ணெய் பிசுக்கை எடுக்க உதவுகிறது.

◆போதுமான அளவு தூக்கம்:

சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் வறட்சி உண்டாகும். இதனை சரி செய்ய நீங்கள் போதுமான அளவு தூங்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்.