21
சரும பராமரிப்பு

வேனிட்டி பாக்ஸ்: கன்சீலர்

நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்த்ததால் மயங்கி விழுந்த அரதப் பழசான ஜோக்குகள் ஆயிரம் படித்திருப்போம். திரையில் பேரழகிகளாக வலம் வருகிற பல நடிகைகளும், நிஜத்தில் அதற்கு நேரெதிராக இருப்பது சகஜம்தான். கண்கள், காதுகள், மூக்கு என எல்லாம் திருத்தமாக இருந்தால் போதும்… அவர்களது சருமத்தில் காணப்படுகிற எல்லாவிதமான குறைகளையும் களைந்து, அழகிகளாகக் காட்ட இருக்கவே இருக்கிறது மேக்கப்!

மேக்கப்பின் உதவியால் இன்று எப்படிப்பட்ட சருமக் குறைகளையும் காணாமல் போகச் செய்ய முடியும். திரையில் தோன்றும் அழகிகளுக்கு மட்டுமின்றி, சாதாரணப் பெண்களும்கூட, தங்கள் சருமத்தின் குறைகளை மறைத்து, நிறைகளை ஹைலைட் செய்து காட்ட மேக்கப்பின் உதவியை நாடலாம். அந்த வகையில் கன்சீலருக்கே முதலிடம்.

கன்சீலர் என்றால் என்ன? அதன் வேலை என்ன? எத்தனை வகைகள் உள்ளன? எப்படித் தேர்ந்தெடுப்பது? உபயோகிப்பது? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அழகுக் கலை நிபுணர் ஷீபாதேவி.

இன்றைய காலகட்டத்தில் மேக்கப் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த மேக்கப்புக்கு முக்கியமாக தேவைப்படுவது கன்சீலர். இது இல்லாமல் மேக்கப் போடுவது மிகவும் கடினம். கன்சீலர் என்பது முகத்தில் உள்ள குறைகளை மறைத்து அழகை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. கண்களுக்கடியில் காணப்படுகிற கருவளையங்கள், கருமையான வட்டங்கள், பருக்கள், அவை உண்டாக்கிய தழும்புகள், மங்கு போன்றவற்றை மறைப்பதற்கும் சருமத்தை ஹைலைட் செய்து காட்டுவதற்கும் சருமத்தில் மேடு பள்ளங்களோ, நிற வித்தியாசங்களோ இல்லாமல் சீராகக் காட்டுவதற்கும் பயன்படுகிறது. கன்சீலர் உபயோகிப்பதற்கு முன் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…

நமது சரும நிறம். அதை நான்கு வகையாக பிரிக்கலாம்.

1. Fair skin (சிவந்த சருமம்)
2. Wheatish skin (கோதுமை சருமம்)
3. Dark wheatish skin (டார்க் கோதுமை சருமம்)
4. Very dark skin (கருமையான சருமம்)கன்சீலரை மேற்சொன்ன சருமத்தின் தன்மைக்கு தகுந்தவாறு நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

1. Fair skin

இந்த சருமம் உடையவர்களுக்கு F.S. series கன்சீலர்களை பயன்படுத்த வேண்டும். F.S. என்றால் Fair skin 22, 28, 38, 626 A, B etc போன்றவை.

2. Wheatish skin F.S. 25, 36, 40, 626 C Etc

இந்த வகையான கன்சீலர்களை பயன்படுத்த வேண்டும்.

3. Dark Wheatish skin

இந்த சருமம் உள்ளவர்கள், L.E. Series கன்சீலர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். L.E. என்றால் (Light Egyptian) LE 626 D 46 Etc.

4. Very Dark skin D.E. (Dark Egyptian) D.E., 665, 665 F etc.

கன்சீலரின் பிராண்டுக்கு ஏற்றபடி இந்த எண்கள் மாறுபடும். சருமத்துக்கேற்ற சரியான கன்சீலரை உபயோகிக்காவிட்டால், அது முகத்தில் பெயின்ட் அடித்தது போல செயற்கையாகக் காட்டும்.

கன்சீலர் கலர்கள்

1. பச்சை

இந்த நிற கன்சீலர், கரும்புள்ளிகள், சிவந்த புள்ளிகள், பருக்கள், புண்கள், வெயிலால் உண்டான சரும பாதிப்புகளை மறைக்க உதவும்.

2. பர்ப்பிள்

மஞ்சள் நிற சருமம் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தினால் சருமம் பளிச்சென தெரியும்.

3. சால்மன்

இந்த வகையான கன்சீலர், ஒருவகையான மீனிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதைக் கண்களை பெரிதாக, பளிச்செனக் காட்டப் பயன்படுத்தலாம்.

4. மஞ்சள்

கண்களுக்கு அடியில் உள்ள கருவளையங்களையும் சருமத்தில் தெரிகிற நரம்புப் பகுதிகளையும் மறைப்பதற்கு இதை பயன்படுத்தலாம்.

5. வெள்ளை

இந்த கன்சீலரை முகத்தில் ஏதாவது ஒரு பகுதியை ஹைலைட் செய்யப் பயன்படுத்தலாம். சிலருக்கு கண்களுக்கு கீழ் இருக்கும் எலும்பு தெரியும். இதை மறைப்பதற்கு இது மிகவும் தேவைப்படும்.

6. ஆரஞ்சு

இதை கரும்புள்ளி, கருவளையங்கள், மங்கு போன்றவற்றை மறைப்பதற்கு பயன்படுத்தலாம்.

7. நியூட்ரல்

ரொம்பவும் கருமையாகவும் இல்லாமல் சிவப்பாகவும் இல்லாதவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.

8. டாட்டூ கன்சீலர்

இது டாட்டூ போட்ட பகுதிகளை ஹைலைட் செய்து காட்டும். தற்காலிக டாட்டூக்களை ஒரு நாள் மட்டும் கலையாமல் அப்படியே வைத்திருப்பதற்கு இதைப் பயன்படுத்தலாம்.

9. ஸ்டூடியோ கன்சீலர்

மாடல்கள், நடிகைகள் போன்ற திரையில் தெரிகிற முகங்களுக்கானது.

10. மாயிச்சரைசிங் கன்சீலர்

ரொம்பவும் சென்சிட்டிவான சருமம் கொண்டவர்களும் கருமையான சருமம் உள்ளவர்களும் தினமும் பயன்படுத்தலாம்.

11. எக்ஸ்ட்ரீம் கவரேஜ் கன்சீலர்

இதை நீண்ட நேரம் மேக்கப்பை தக்க வைக்கப் பயன்படுத்தலாம். இது சருமத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. மேடை நிகழ்ச்சிகளின் போதும் பயன்படுத்தலாம். கன்சீலரானது ஸ்டிக், பென்சில், பேனா, க்ரீம், லிக்யுட், ரோல், கேக் எனப் பல வடிவங்களில் கிடைக்கிறது. கன்சீலர் தடவுவதற்கு முன் மிதமான கிளென்சர் பயன்படுத்தவும். அதன் பிறகு மாயிச்சரைசர் தடவவும். மாயிச்சரைசர் போட்ட பிறகு கன்சீலர் போட்டால் திட்டுத் திட்டாக இல்லாமல் சீராக இருக்கும்.

கன்சீலரை முதலில் உங்கள் கை விரல் ஒன்றில் எடுத்து சருமத்தில் தடவவும். உங்கள் விரலில் எடுத்த கன்சீலரும், முகத்தில் இருக்கும் கன்சீலரும் ஒரே சீரான நிறத்தில் இருக்க வேண்டும். இதே போன்று மற்ற இடங்களிலும் டெஸ்ட் பண்ணவும்.கண்களில் இருக்கும் கருவளையத்தை மறைப்பதற்கு கண்களும் மூக்கும் இணையும் இடத்தில் இருந்து இமை முடியும் இடம் வரைக்கும் துளித் துளியாக அப்ளை செய்யவும்.

7 ம் நம்பர் பிரஷ் உபயோகித்தோ அல்லது விரல் நுனியாலோ மிகவும் லேசாக தேய்க்கவும். கன்சீலர் பயன்படுத்துவதற்கு பிரஷ் மிகவும் சிறந்தது. கன்சீலரை தேய்க்கக் கூடாது. மிகவும் லேசாகத் தடவவும். பிறவித் தழும்புகளை மறைப்பதற்கு 2 கோட்டிங் தடவ வேண்டியிருக்கும். புருவம் எடுப்பாக தெரியவும் இதைப் பயன்படுத்தலாம்.

சில பேருக்கு கண்கள் உள்ளடங்கி இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மூக்கின் உள்பக்கத்தில் இருந்து ஆரம்பிக்கவும். சரியாக உபயோகிக்காவிட்டால் கண்கள் தூங்கி வழிந்த மாதிரி இருக்கும். கண்களின் அடிப் பகுதியில் மிகவும் கவனமாக அப்ளை பண்ணவும். சருமத்தின் பரு, கரும்புள்ளிகள், தழும்புகள், வடுக்கள் எதுவாக இருந்தாலும், ஒவ்வொன்றின் மேலும் அப்ளை பண்ணவும். உங்கள் சருமத்தில் அதிகப்படியாக கன்சீலரை பயன்படுத்த வேண்டும் என்றால் மிகவும் மெல்லிய லேயராக பயன்படுத்தவும். இல்லையென்றால் நேரம் ஆக ஆக திட்டுத் திட்டாக தெரியும்.

கன்சீலரை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் சருமத்தின் நிறத்தை விட சற்றே மட்டான நிறத்தில், அதாவது, லைட் ஷேடில் தேர்வு செய்யவும். கன்சீலரை அப்ளை பண்ணியதும் கண்ணாடியை பார்க்கவும். சருமத்தோடு சரியாக பொருந்தவில்லையென்றால் மேக்கப் ஸ்பாஞ்சின் நுனியை தண்ணீரில் நனைத்து வெளிப்பக்கமாக துடைத்து சரி செய்யவும். பிறகு ஃபவுண்டேஷன் தடவவும். ஃபவுண்டேஷன் என்பது என்ன? அதன் அவசியம் என்ன? அதை எப்படித் தேர்ந்தெடுப்பது? எப்படி உபயோகிப்பது என்கிற தகவல்கள் அடுத்த இதழில்…21

Related posts

பெண்களே நகத்தை அழகாக வெச்சிக்க ஆசையா?…

nathan

ஒளிரும் சருமத்திற்கு இயற்கை ஃபேஸ் பேக்

nathan

மழைக்கால சரும வறட்சியைப் போக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க !!

nathan

பனிக்கால சரும பாதுகாப்பு முறைகள்

nathan

தேமலை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்

nathan

சருமத்திற்கு சில எளிய வீட்டு பராமரிப்பு முறை!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அக்குள் பகுதி கருப்பாக இருப்பதற்கு நீங்க செய்யும் இந்த தவறுகள்தான் காரணமாம்…!

nathan

முன்னோர்கள் காட்டிய இயற்கை மூலிகை பொருட்களை கொண்டு தயாரான நலங்கு மாவை பயன்படுத்துவது அழகு…

nathan

கோடையில் பெண்களின் சரும பராமரிப்பிற்கு உதவும் 4 வழிகள்

nathan