29.2 C
Chennai
Wednesday, Jan 15, 2025
17
சரும பராமரிப்பு

வேனிட்டி  பாக்ஸ்: ஃபவுண்டேஷன்

ஒரு காலத்தில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமே ஃபவுண்டேஷன் உபயோகித்தார்கள். அவர்களுடைய சருமத்தில் உள்ள குறைகளை மறைத்து மெருகுப்படுத்திக் காட்டவும் பளபளப்பைக் கூட்டவும் உபயோகித்தார்கள். இன்று சாமானியர்களும் ஃபவுண்டேஷன் உபயோகிக்கிறார்கள். மட்டுமின்றி, தினமுமே ஃபவுண்டேஷன் உபயோகிக்கும் பழக்கம் இன்று பலருக்கும் உள்ளது.

சாதாரண சருமத்தை பேரழகாகக் காட்டக் கூடியது மேக்கப். அந்த மேக்கப்புக்கே அடிப்படையானது ஃபவுண்டேஷன். கடந்த இதழில் பார்த்த கன்சீலர் மாதிரியே ஃபவுண்டேஷனிலும் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றைத் தேர்ந்தெடுப்பது முதல் உபயோகிப்பது வரையிலான சகல தகவல்களையும் விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஷீபாதேவி.

லிக்யுட், க்ரீம், ஸ்டிக், பவுடர் என நிறைய வகைகளில் ஃபவுண்டேஷன் கிடைக்கும். உங்கள் நிறத்திற்கு ஏற்றவாறு முதலில் தேர்ந்து எடுக்கவும். ஃபவுண்டேஷன் இல்லாமல் மேக்கப் போட முடியாது. ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் சரும நிறத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு ஃபவுண்டேஷனை தேர்வு செய்யவில்லை என்றால் உங்கள் சரும நிறம் கருப்பாக தெரியும். அதன் பிறகு நீங்கள் எவ்வளவு மேக்கப் போட்டாலும் நன்றாக இருக்காது. உங்களுக்குத் தேர்ந்ெதடுக்கத் தெரியவில்லை எனில் அழகுக்கலை நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

1. சிவந்த நிறம் (Fair Skin)

இந்த சருமம் உடையவர்கள் 25F, 26F ஃபவுண்டேஷன் பயன்படுத்த வேண்டும்.

2. கோதுமை நிறம் (Wheatish Skin)

இந்த வகையான சருமம் உடையவர்கள் 27, 28 ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம்.

3. கருப்பான நிறம் (Dark Skin)

இந்த வகையான சருமம் இருப்பவர்களுக்கு 29, 30 எண்களைப் பயன்படுத்தலாம்.

பிராண்டுக்கு ஏற்றவாறு எண்கள் மாறு படும். உங்களுக்கு நம்பர் சரியாக தேர்வு செய்ய முடியவில்லை என்றால் Fair skin-1, Wheatish-2, Dark skin-3 என கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

ஃபவுண்டேஷன் வகைகள்

1.ஆயில் ஃப்ரீ ஃபவுண்டேஷன் சருமத்தில் எண்ணெய் வழியும் தோற்றத்தை மறைத்து மென்மையைக் கொடுக்கும். இந்த ஃபவுண்டேஷன், எண்ணெய் பசையான சருமத்திற்கு கொஞ்ச நேரம் மட்டும் இருக்கும். உங்கள் சருமத்தில் எண்ணெய் பசை எந்த அளவு உள்ளதோ அந்த அளவுக்கு அந்த மேக்கப் நீடிக்கும். இந்த சருமம் உடையவர்கள் வேறு ஃபவுண்டேஷன் போட்டால் முகப்பருக்கள் வரும். ஆயில் ஃப்ரீ ஃபவுண்டேஷன் இந்த வகையான சருமத்தின் எண்ணெய் பசையை மறைத்து உலர்ந்த சருமமாகக் காட்டும்.

2. ஒரு சில சருமத்தில் எந்த வகையான ஃபவுண்டேஷன் போட்டாலும் சில மணி நேரம்கூட இருப்பதில்லை என்பார்கள். அவர்கள் long wearing ஃபவுண்டேஷன் உபயோகிக்கலாம். இதில் 4 hours, 5 hours, 8 hours, 12 hours என கிடைக்கிறது. உங்கள் சருமத்திற்கு எத்தனை மணிநேரம் ஃபவுண்டேஷன் தேவைப்படுகிறதோ அதை தேர்வு செய்து கொள்ளவும். இந்த ஃபவுண்டேஷன் உங்கள் சருமத்தில் உடனே ஒட்டிக் கொள்ளும். எனவே வேகமாக முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இல்லையென்றால் அதை சரி செய்வது கடினம். அதே மாதிரி இந்த ஃபவுண்டேஷன் கிளென்சர் வைத்து நீக்க முடியாது. மேக்கப் ரிமூவர் வைத்து தான் நீக்க முடியும். இந்த வகை ஃபவுண்டேஷன் வாங்குபவர்கள் மேக்கப் ரிமூவரையும் சேர்த்து வாங்கிக் கொள்ளவும்.எண்ணெய் வழிகிற சருமம் முதல் மிக அதிகமாக எண்ணெய் வழிகிற சருமம் வரை இது மிகவும் ஏற்றது.

3. மாயிச்சரைசிங் ஃபவுண்டேஷன் நார்மல் மற்றும் வறண்ட சருமங்களுக்கு (Normal to dry skin) ஏற்றது. இந்த ஃபவுண்டேஷன் கொஞ்சம் திக்காக இருக்கும். இதனால் (Blend) அப்ளை செய்வதற்கு ஈஸியாக இருக்கும். மற்றும் சருமத்தில் உள்ள குறைகளை சரி செய்யும் முக்கிய பொருட்கள் இந்த ஃபவுண்டேஷனில் இருக்கின்றன. தவிர, இந்த ஃபவுண்டேஷன் ஒருவித மென்மையான தோற்றத்தைக் கொடுப்பதால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

4. சாதாரண சருமம் மற்றும் கொஞ்சம் வறண்ட சருமத்துக்கும் ஓரளவு எண்ணெய் வழிகிற சருமத்துக்கும் ஏற்றது பவுடர் ஃபவுண்டேஷன். சருமத்துக்கு மினுமினுப்பு கொடுக்கும். இந்த ஃபவுண்டேஷனை பகலில் உபயோகிக்க வேண்டும்.

5. ஜெல் ஃபவுண்டேஷன் சருமத்தில் இருக்கும் சிவப்புப் புள்ளிகள் மற்றும் சின்னச் சின்ன குறைகளை மறைத்து சருமத்திற்கு இயற்கையான நிறத்தைக் கொடுக்கும். மேலும் எண்ணெய் வழிகிற சருமத்தை சாதாரண சருமமாகக் காட்டுவதற்கு இதை பயன்
படுத்தலாம். முகப்பருக்களை மறைப்பதற்கும் பயன்படுத்தலாம்.

6. வெயிலினால் சருமம் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.எஃப் ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம்.

7. வயதானவர்களுக்கு முகத்தில் இருக்கும் சுருக்கம், கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையங்கள், பொலிவிழந்த தோற்றம் ஆகியவற்றை மறைக்கக் கூடியது ஏஜ் டிஃபென்ஸ் ஃபவுண்டேஷன். வயதான தோற்றத்தை மறைக்கும்.

8. பிரைட்டனிங் சீரம் ஃபவுண்டேஷன் சருமத்தில் இருக்கும் மங்கு உள்ளிட்ட குறைபாடுகளை மறைத்து மிருதுவான சருமத்தை கொடுக்கும். மேலும் சருமத்தின் உள்ளிருக்கும் பளபளப்பை கொண்டு வரும். வியர்வையை கட்டுப்படுத்தும்.

9. ஸ்கின் கிளாரிஃபையிங் ஃபவுண்டேஷனை கேக் வடிவில் கிடைக்கும். இந்த ஃபவுண்டேஷனை ஈரமாகவும் வறட்சியாகவும் உபயோகப்படுத்தலாம். வறட்சியாக உபயோகித்தால் உங்கள் சருமம் இயற்கையான அழகைக் காட்டும். ஈரமாக உபயோகித்தால் உங்கள்சருமத்தின் அழகை மிகைப்படுத்தி காட்டும்.

10. முகப்பருக்களை மறைத்து சருமம் மிருதுவாகவும் சீராகவும் தோற்றமளிக்க உதவக்கூடியது அக்னே ஃபவுண்டேஷன்.

11. Open Pores Foundation

முகத்தில் உள்ள குழிகளை மறைத்து சருமத்தை பட்டு போலக் காட்டக்கூடியது ஓபன் போர்ஸ் ஃபவுண்டேஷன்.

12. Smudge Proof Foundation

ஸ்மட்ஜ் ப்ரூஃப் ஃபவுண்டேஷன் என ஒன்று இருக்கிறது. அதை முகூர்த்த நேர ஃபவுண்டேஷன் என சொல்லலாம். ஹோம புகையில் மேக்கப் கலையாமல் இருக்க உதவக்கூடியது இது.வறண்ட சருமம் கொண்டவர்களது சருமத்தை இயற்கையான பொலிவுடன் காட்டக்கூடியது ஆயில் மேக்கப். அதைச் செய்வதற்குத் தேவையான

ஃபவுண்டேஷன்…

1. சிவந்த சருமத்துக்கு – கோல்ட் லிக்யுட் ஃபவுண்டேஷன்.
2. மாநிறமாக இருப்பவர்களுக்கு – பீஜ் மற்றும் ஆரஞ்சு.
3. கருப்பாக இருப்பவர்களுக்கு- கோல்ட் மற்றும் பிரவுன்.

சரியான ஃபவுண்டேஷனை தேர்வு செய்யவில்லை என்றால்?

சரும வறட்சி, அரிப்பு, அலர்ஜி, சிவந்து போதல், வீக்கம், முதுமைத் தோற்றம், சுருக்கங்கள் போன்றவை வரும். எனவே ஃபவுண்டேஷன் உபயோகிப்பதற்கு முன்பு உங்கள் முழங்கையில் சிறிதளவு அப்ளை பண்ணவும். பிறகு 24 மணி நேரம் கழித்து அந்த இடத்தில் எந்த வகையான அலர்ஜியும் வரவில்லை என்றால் முகத்தில் அப்ளை செய்யவும்.

ஃபவுண்டேஷன் போடுவதற்குதேவையானவை?

மேக்கப் ஸ்பாஞ்ச், ஃபவுண்டேஷன் பிரஷ், கிளென்சர், மாயிச்சரைசர், சன் ஸ்கிரீன்.

எப்படி உபயோகிப்பது?

முதலில் கைகளையும் முகத்தையும் சுத்தம் செய்து கொள்ளவும். உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு மாயிச்சரைசிங் சன்ஸ்கிரீன் தடவவும். அது சருமத்தில் ஒரு நிமிடம் ஊடுருவும் வரை பொறுத்திருக்கவும். அடுத்தது தேவையான இடங்களில் கன்சீலர் தடவவும். ஃபவுண்டேஷன் அப்ளை செய்வதற்கு என பிரஷ் மற்றும் மேக்கப் ஸ்பாஞ்ச் கிடைக்கிறது. இல்லை எனில் கை விரல்களின் மூலம் சிறு சிறு துளி பொட்டுகளாக கன்னம், நெற்றி, மூக்கு என எல்லா இடங்களிலும் தடவவும். பிறகு அந்தப் பொட்டுகளை ஒன்று சேர்த்து சீராக்கவும். முகத்தில் கோடுகள் விழாதவாறு சீர்படுத்தவும்.

ஃபவுண்டேஷனை முகம் முழுவதும் அப்ளை செய்யக்கூடாது. கண்களைச் சுற்றி, மூக்கு, கன்னம், நெற்றி என அப்ளை செய்யவும். ஃபவுண்டேஷன் உபயோகிப்பதற்கு முன் மாயிச்சரைசர் உபயோகப்படுத்த வேண்டும். ஃபவுண்டேஷன் அதிகமாகி விட்டால் கவலைப்பட வேண்டாம். சிறிதளவு மாயிச்சரைசரை பிரஷ்ஷில் எடுத்து தடவினால் சரியாகி விடும். அல்லது டிஷ்யூ வைத்து முகம் முழுவதும் ஒற்றி எடுக்கவும். 17

Related posts

பதினைந்தே நாட்களில் பொலிவான மற்றும் இளமையான தோற்றத்தைப் பெற வேண்டுமா?சூப்பர் டிப்ஸ்

nathan

ஐந்தே நாட்களில் பொலிவான சருமத்தைப் பெற தேன் ஃபேஸ் பேக் போடுங்க

nathan

மூக்கின் மேல் இருக்கும் சொரசொரப்பை நீக்க சில இயற்கை வழிகள்!!!

nathan

முகம் பிரகாசமாக ஜொலிக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தி செய்யக்கூடிய 4 வகையான ஃபேஸ் பேக்கினை தயார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க…

nathan

பிரசவ தழும்புகளை மறைய இயற்கையாக மறைய…

nathan

கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் மாற….

nathan

சருமத்தை மென்மையாக்கும் சர்க்கரை ஃபேஸ் பேக்!

nathan

அக்குள் கருமையை போக்கும் அரிசி ஸ்கரப்

nathan

வயதானலும் அழகை கூட்ட வழிகள்

nathan