29.4 C
Chennai
Saturday, Sep 28, 2024
jnbstID
தலைமுடி சிகிச்சை

வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்குவது எப்படி?

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊறவைத்து அலச வேண்டும். இதனால் நரை முடி மறைய ஆரம்பிக்கும்.

ஹென்னா:

ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

நெல்லிக்காய்:

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும் படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.

கறிவேப்பிலை:

கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காணமுடியும்.

வெந்தயம்:

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊறவைத்தோ அல்லது அதனை இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரைமுடி மறையும்.

மிளகு:

தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊறவைத்து அலசவேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

ப்ளாக் டீ

1 கப் ப்ளாக்டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊறவைத்து அலச வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.jnbstID

Related posts

கூந்தல் உதிர்ந்து தலை வழுக்கை ஆகிவிட்டதா? இதை படிங்க…

nathan

இளநரையை தவிர்க்க

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பின் ஏற்படும் கூந்தல் உதிர்தலைத் தடுக்க சில டிப்ஸ்…

nathan

நரை முடி கருப்பாக எளிய டிப்ஸ் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பொடுகை விரட்ட உப்பை எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?

nathan

முடி உதிர்தல் பிரச்சனையா? வாரம் ஒரு முறை இதை பயன்படுத்துங்க

nathan

எலுமிச்சையோட இதுல ஏதாவது ஒன்னு சேர்த்து தேய்ங்க… வழுக்கையே விழாது… சூப்பர் டிப்ஸ்..

nathan

சூப்பர் டிப்ஸ்! கலர் செய்த கூந்தலை பராமரிக்க 3 வழிகள்

nathan

கூந்தலில் அதிகப்படியான எண்ணெய் பசையை தடுக்கும் வழிகள்

nathan