பத்திரிகை ஆசிரியரின் மனைவி, மகள்கள்,மகன், பேரன் என்று 4 பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 27 பக்கங்கள் கொண்ட தற்கொலை கடிதங்கள் சிக்கியிருப்பதால் தற்போது போலீஸ் விசாரணை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
பெங்களூருவில் பேட்டரஹள்ளி திகலரபாளையாவை சேர்ந்தவர் சங்கர் (54). பத்திரிகை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ‘சாசகா’ என்னும் வார பத்திரிகை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மதுபான கடைகள் பெங்களூருவில் இருந்துள்ளன.
இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் வெளியே சென்ற பின்னர் வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. குடும்பத்தினரும் எங்கேயாவது சென்று இருப்பார்கள் என்று அக்கம்பக்கத்தினர் நினைத்துள்ளனர்.
ஆனால் சில தினங்கள் கழித்து வீட்டுக்குள்ளிருந்து துர்நாற்றம் வீசித் தொடங்கியது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து சோதனையிட்டனர்.
வீட்டிற்குள் பத்திரிக்கை ஆசிரியரின் மனைவி பாரதி, மகள்கள் சிந்தனா, இந்துராணி, மகன் மதுசாகர், 9 மாத பேரக் குழந்தை ஆகியோர் உயிரிழந்து சடலமாக கிடந்தனர். 4 பேரும் தற்கொலை செய்துகொண்ட நிலையில் 9 மாத குழந்தை பசியால் உயிரிழந்தது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த 3 வயது குழந்தை மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இது குடும்ப பிரச்சனை காரணமாக நடந்த தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 5 பேரின் மரணத்திற்கு என்ன காரணம் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சங்கரின் மகன் மதுசாகர் எழுதி வைத்திருக்க 19 பக்க தற்கொலை கடிதம் சிக்கியுள்ளது. மேலும் 2 மகள்களும் எழுதி வைத்திருந்த தலா 4 பக்க தற்கொலை கடிதம் சிக்கி உள்ளது. இந்த கடிதங்களில் சங்கரின் கள்ள உறவு பாலியல் தொல்லை தற்கொலைக்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக சங்கரின் மகன் எழுதிய தற்கொலை கடிதத்தில், தனது தந்தைக்கு 5 பெண்களுடன் கள்ள உறவு இருந்ததாகவும், வீட்டின் அருகே வசித்து வந்த தினக் கூலி வேலை செய்து வந்த விதவைப் பெண்ணுடன் பண ஆசைகாட்டி கள்ள உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் , தங்களது வீட்டில் வாடகைக்கு வந்த ஒரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்படுத்திக் கொண்டதாகவும், நர்ஸ் ஒருவரை அவரின் கணவரிடம் தான் டாக்டர் என்று சொல்லி தனக்கு உதவியாளர் வேண்டும் என்று சொல்லி அவரைத் தன்னுடனேயே வைத்து கொண்டார் என்றும் இப்படி பண ஆசை காட்டி ஐந்து பெண்களை தங்கள் வலையில் சிக்க வைத்து இருந்தார் தன் தந்தை என்றும் இதற்காக ராஜாஜி நகரில் இருக்கும் அலுவலகத்தை பயன்படுத்தி வந்தார் என்றும் எழுதி உள்ளார்.
5 பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர்கள் அக்கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். 5 பெண்களின் கள்ள உறவினால் தன் தாய் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், தன் தாயை மனரீதியாக உடல் ரீதியாக கொடுமைப்படுத்தி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மகள்கள் என்று கூட பார்க்காமல் மகள்களுக்கும் தொல்லை கொடுத்து வந்ததால் தான் தற்கொலை முடிவு எடுத்தோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், சங்கர் இதை மறுத்துள்ளார். மேலும் போலீசார் அவரிடம் தீவிர விசாரணையை நடத்தி வருகிறார்கள்.