பொதுவாக பெண்களை விட ஆண்களே வழுக்கை பிரச்சினையினால் அதிகம் அவதிப்படுவதுண்டு.
இதற்கு கடைகளில் எத்தனையே மருந்துகள் இருந்தாலும் இயற்கை முறையில் தீர்வினை காண்பதே சிறந்ததாகும்.
இதற்கு நம் அடிக்கடி சமையலுக்கு பயன்படுத்தப்படும் வெங்காயம் ஒரு சிறந்த பொருளாக கருதப்படுகின்றது.
ஏனெனில் வைட்டமின் சி, எ, ஈ, பி போன்றவை நிறைந்துள்ளன. இது முடி வளர்ச்சியை துண்ட செய்கின்றது.
தற்போது வெங்காயத்தை வைத்து வழுக்கை தலையில் முடியினை எப்படி வளர செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் 250 மி.லி.
வெங்காயம் 3
கருவேப்பில்லை 1 கப்
ஆமணக்கு எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும். எண்ணெய் காய்ந்த பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொண்டு வதக்கவும்.
பின் இவற்றுடன் கருவேப்பில்லை இலைகளையும் சேர்த்து வதக்கவும்.
10 நிமிடம் கழித்து இவற்றுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.
பிறகு இதனை ஆறவிட்டு வடிக்கட்டி கொண்டு தலைக்கு பயன்படுத்தலாம்.
வாரத்திற்கு 2-3 முறை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் நல்ல பலனை அடையாளம்.