கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தும் எக் ஷாம்பு
வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தலாம்.
பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை கூந்தல் உதிர்வது. இந்த பிரச்சனையை சமாளிக்க கண்ட கண்ட ஷாம்புவை பயன்படுத்தால் வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தலாம்.
ஒரு முட்டையுடன் அரை டீஸ்பூன் ஆலிவ் ஆயில், அரை மூடி எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் மைல்டு ஷாம்பு, சில துளிகள் எசன்ஷியல் ஆயில் சேர்த்து, நன்கு நுரைத்துவரும்படி எக் பீட்டரால் (egg beater) கலக்கவும்.
அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்குள் ஹோம்மேட் எக் ஷாம்பு தயார். வழக்கமாக ஷாம்பு பயன்படுத்துவதுபோலவே, இந்த ஷாம்புவை தலையில் அப்ளை செய்து தேய்த்து, குளிர்ந்த நீரால் நன்கு அலசவும் (வெந்நீர், முட்டையின் வாசத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதால் அதைத் தவிர்க்கவும்).
இந்த ஷாம்புவை ஃப்ரிட்ஜில் வைத்து, இரண்டு நாட்கள்வரை பயன்படுத்தலாம்.
இந்த இயற்கை ஷாம்புவை பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது பிரச்சனை இருக்காது. கூந்தல் பட்டு போல் பளபளப்பாக இருக்கும்.