மகாராஷ்டிராவில், நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் பேரணிகளில் ஈடுபட்டு பெரும் போராட்டங்களை நடத்தினர்.
நிலம் கையகப்படுத்துவதற்கு இழப்பீடு வழங்கக் கோரி வார்தா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 103 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அரசு செவிசாய்க்க மறுத்ததால், விவசாயிகள் மாநில சட்டசபை கட்டிடத்தில் ஏறி முதல் மாடியில் இருந்து குதித்தனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் பாதுகாப்பு வலையில் விழுந்தனர். பாதுகாப்பு வலையில் இருந்து தொங்கிய விவசாயிகளை பாதுகாப்பு படையினர் மீட்டனர். தகவல் அறிந்த துணை அமைச்சர் தாதாஜி போஸ் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் 15 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்தார்.