நம் உடலில் இருந்து வெளிவரும் வியர்வை நம் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் மற்றும் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும். வியர்வையில் உள்ள டெர்மிசிடின், சருமத்துளைகளில் பாக்டீரியாக்கள் நுழைவதைத் தடுத்து அழிக்கும். உடலில் வியர்வை அதிகம் வெளிவந்தால், அது கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
உடலில் துர்நாற்றம் வீசுவதற்கு வியர்வை காரணமல்ல, டெர்மிசிடினால் அழிக்கப்பட்ட பாக்டீரியாக்கள் தான். இந்த துர்நாற்றத்தைத் தடுக்க நாம் டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்துவோம். ஆனால் வியர்வை நாளங்களை இந்த டியோடரண்ட்டுகளிடல உள்ள அலுமினியம் அடைத்து, பாக்டீரியாவின் வளர்ச்சியை மேலும் தான் அதிகரிக்கும்.
டியோடரண்ட்டுகள் டியோடரண்ட்டுகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் மற்றும் டாக்ஸின்கள், ஆரோக்கிய பிரச்சனைகளான இனப்பெருக்க மண்டல பாதிப்பு, அல்சைமர் மற்றும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
துர்நாற்றத்தைத் தடுக்கும் பழம் வியர்வை துர்நாற்றத்தைத் தடுப்பதற்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கண்ட டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்தாமல், துர்நாற்றத்தைப் போக்க உதவும் எலுமிச்சையைப் பயன்படுத்துங்கள்.
பயன்படுத்தும் முறை எலுமிச்சையை இரண்டாக வெட்டி, குளித்து முடித்த பின், எலுமிச்சையை அக்குளில் தேய்த்து, நன்கு காய்ந்த பின் உடையை அணிய வேண்டும்.
பாக்டீரியாக்கள் அழியும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், அக்குளில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அழித்து, ஒரு நாள் மட்டுமின்றி சில நாட்கள் வரை வியர்வை துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.