தேவையான பொருட்கள் :
வாழைப்பூ – 1
சிறிய வெங்காயம் – 100 கிராம்
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1 தேங்காய்
எண்ணெய் -2 தேக்கரண்டி
செய்முறை:
* வாழைப்பூவை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும்.
* வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளித்து வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.
* அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை இட்டு நன்கு கிளறி, சிறிது நீர் தெளித்து மூடிவைத்து வேகவையுங்கள். பின்பு தேங்காய் துருவல் உப்பு கலந்து நன்கு கிளறி வதக்குங்கள்.
* மற்றொரு கடாயில் தாளிக்கவேண்டிய பொருட்களை தாளித்து சேர்த்து சுவையுங்கள்.
* இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. மூல நோய் உள்ளவர்கள் அடிக்கடி செய்து சாப்பிடலாம்.