சருமம் நிறமாக இருந்தாலும், வாயை சுற்றிலும் சிலருக்கு கருமையாக இருக்கும், அதேபோல் நாடியும் கருப்பாகியிருக்கும். நீங்கள் மேக்கப் போட்டு மறைத்தாலும் அந்த இடம் மட்டும் அடர்ந்த நிறத்தில் தெரியும்.
கன்னம் நெற்றியை காட்டிலும், வாயின் அருகேயும், கண்களுக்கு அடியிலும் மிகவும் மென்மையான சருமம் இருக்கும். சூரிய ஒளி படும்போது அங்கே மெலனின் ஹார்மோன் விரைவில் தூண்டப்பட்டு கருமையடையச் செய்துவிடும்.
இதனை போக்குவது மிக சுலபம். ஆனால் நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இறந்த செல்கள் அங்கே குவிந்து, அந்த கருமையை போகவிடாமல் செய்துவிடும். ஆகவே அவ்வப்போது அந்த கருமையை நீக்க பிரயத்தனப்படுங்கள்.
இயற்கையாக ப்ளீச் செய்யும் பொருட்கள்தான் பெஸ்ட் சாய்ஸ். தயிர், எலுமிச்சை, மோர் ஆகியவை கருமையை நீக்கும். இல்லை அதெல்லாம் ட்ரை பண்ணியாச்சு யூஸ் இல்லன்னு சொல்றவங்க இந்த குறிப்பை உபயோகப்படுத்துங்க. நிச்சயம் பலனளிக்கும்.
ஓட்ஸ் மாஸ்க் : தேவையானவை : ஓட்ஸ் – 1 டீ ஸ்பூன் தக்காளி சாறு – 1 டீ ஸ்பூன் தயிர் – அரை டீ ஸ்பூன்
தக்காளி பெரிய துவாரங்களை சுருக்க செய்யும். அழுக்குகள் செல்கள் தங்காது. அதோடு நிறத்தையும் வெளுக்கச் செய்யும் குணமுண்டு. தயிர் ஈரப்பதத்தை அளிக்கும், கருமையையும் நீக்கும். ஓட்ஸ் இறந்த செல்களை நீக்கும் இயற்கையான ஸ்க்ரப். சுருக்களை நீக்கி முகத்தை பொலிவுறச் செய்யும்.
ஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். விரைவில் பலன் கிடைக்க, வாரம் மூன்று முறையாவது போடுங்கள்.