கூந்தல் சிலருக்கு இயற்கையிலேயே கரடுமுரடாக இருக்கும். கடினத் தன்மையுடன், வறண்டு பார்க்க நல்ல தோற்றத்தை தராது. அதோடு சிக்கு விழுந்தால் மிகவும் சிரமமாகிவிடும். முடி உதிர்தல், பொடுகு ஆகியவை எளிதில் வந்துவிடும்.
எண்ணெய் வைத்தாலும் மீண்டும் வறட்சி ஏற்பட்டுவிடும். இதற்கு இந்த குறிப்பை ட்ரை பண்ணுங்க. பலன் கண்கூடாக காண்பீர்கள்.
தேங்காய் எண்ணெய் காலம் காலமாக நாம் பயன்படுத்தி வருகிறோம். இது சரும மற்றும் கூந்தலின் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்கிறது. அதனால்தான் நம் பாட்டி காலங்களில் இடுப்பிற்கும் கீழே ஆரோக்கியமான கூந்தலை பெற்றார்கள்.
ஆனால் இப்போது அதனை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக வாசனை கலந்த எண்ணெய்களை உபயோகிக்கிறோம். அவற்றில் தேங்காய் எண்ணெயின் வாசனை திரவியம் மட்டுமே இருக்குமே தவிர, உண்மையான தேங்காய் எண்ணெய் இருக்காது.
ஆகவே எப்போது வாங்கினாலும் இயற்கையான செக்கில் ஆட்டிய எண்ணையே மிகவும் உகந்தது. தேங்காய் எண்ணெய் வேர்கால்களை தூண்டி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
தேங்காய் பால் மிக அதிகமான புரோட்டின் கொண்டுள்ளது. மிருதுத்தன்மையை அளிக்கும். கூந்தலுக்கு மினுமினுப்பும். மென்மையும் அளிக்கும். இவ்விரண்டையும் பயன்படுத்திப் பாருங்கள். பிரகு கூந்தல் நீங்கள் சொன்னபடி கேக்கும்.
தேவையானவை : தேங்காய் பால் – ஒரு கப் அல்லது உங்கள் கூந்தலுக்கேற்ப தேங்காய் எண்ணெய் -அரை கப் முட்டை – 1 ( விருப்பமானால்)
முட்டையை நன்றாக அடித்துக் கொண்டு அதில் இந்த இரண்டையும் கலந்து, தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து, தலையை அலசவும்.
பிறகு பாருங்கள் கூந்தல் எவ்வளவு மிருதுவாகவும் பொலிவாகவும் இருக்கின்றது என்று. வாரம் ஒரு நாள் இப்படி உபயோகித்துப் பாருங்கள். நீங்களே ஆச்சரியபப்டும்படி உங்கள் கூந்தல் மாறும்.