வறட்சியான சருமத்தைப் போக்க வெறும் மாய்ஸ்சுரைசர் அல்லது ஜெல் வடிவ க்ரீம்களைப் பயன்படுத்துவோம். என்ன தான் விலை அதிகமான காஸ்மெடிக்ஸ் பொருட்களை அல்லது மூலிகை கலந்த சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தினாலும், நாள் முடிவதற்குள் சரும மீண்டும் வறட்சி அடைந்துவிடுகிறதா?
அப்படியெனில் உங்களுக்கு அளவுக்கு அதிகமான சரும வறட்சி உள்ளதென்று அர்த்தம். அத்தகையவர்கள் அன்றாடம் ஒருசில விஷயங்களை செய்யக்கூடாது. அவற்றைச் செய்தால் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும்.
எனவே இங்கு தமிழ் போல்ட் ஸ்கை வறட்சியான சருமம் உள்ளவர்கள் தினமும் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளது.
முகத்தை அடிக்கடி கழுவுவது வறட்சியான சருமம் கொண்டவர்கள், அடிக்கடி முகத்தைக் கழுவக் கூடாது. குறிப்பாக சோப்பு அல்லது ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இது வறட்சியை மேன்மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே அளவுக்கு அதிகமான சரும வறட்சியைக் கொண்டவர்கள், ஒரு நாளைக்கு 2 முறைக்கு மேல் முகத்தை நீரில் கழுவக்கூடாது.
கடுமையான சோப்புக்கள் சோப்புக்களில் அதிகப்படியான அமிலம் அல்லது pH அளவு அதிகமாக இருந்தால், அந்த சோப்புக்களைப் பயன்படுத்தக்கூடாது. வேண்டுமானால் கிளிசரின் கொண்ட சோப்புக்களைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இது சருமத்தை நீண்ட நேரம் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும்.
சுடுநீர் குளியல் குளிர்கிறது என்று மிகவும் சூடான நீரில் குளிக்கக்கூடாது. அப்படி குளித்தால், அது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை முற்றிலும் வெளியேற்றி, சரும வறட்சியை மேன்மேலும் அதிகரிக்கும். எனவே குளிர்ந்த அல்ல வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிக்க வேண்டும்.
ஆப்டர் ஷேவ் லோசன் வறட்சியான சருமம் கொண்ட ஆண்கள் ஆப்டர் ஷேவ் லோசனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக pH அளவு அதிகம் கொண்ட லோசனைப் பயன்படுத்தவே கூடாது. வேண்டுமானால் pH குறைவாக உள்ள மற்றும் கிளிசரின் அல்லது கற்றாழை ஜெல் கொண்ட ஆப்டர் ஷேவ் லோசனைப் பயன்படுத்தலாம்.
டோனர் டோனர்களும் சருமத்தை மேலும் வறட்சியடையச் செய்யும். எனவே வறட்சியான சருமம் உள்ளவர்கள் டோனரை தினமும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சருமம் அதிகம் வறட்சியடைவதற்கு போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருப்பதும் ஓர் காரணம். எனவே வறட்சியான சருமம் உள்ளவர்கள், தினமும் தவறாமல் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டியது அவசியம்.