ழங்கால மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்று வரகரிசி. அதனை பற்றி இன்றைய கால மக்களில் பலர் தெரிந்திருக்க மாட்டார்கள். இந்த வரகரிசி சாதாரணமாக எல்லா கடைகளிலும் கிடைக்கும். இதில் அனேக சத்துக்கள் உள்ளன.
இதனை எப்படி செய்வதென்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இந்த அரிசியை வைத்து தக்காளி சாதம் செய்யலாம் என்றால் நீங்கள் வேண்டாம் என்றா சொல்வீர்கள். இப்பொழுது இந்த வரகரிசி தக்காளி சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்…
வரகரிசி – 1/2 கப்
தக்காளி – 2 (அரைத்தது)
வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
கடுகு – 1/4 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 1
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வரகரிசியை 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்ததாக, குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர், இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
அத்துடன் தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லியை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
பின்னர், தண்ணீர் சேர்த்து கொதித்ததும் வரகரிசி, உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கினால் சுவையான வரகரிசி தக்காளி சாதம் ரெடி….