லியோ படத்தின் சிறப்பு காட்சிகளை காலை 9 மணிக்கு மட்டும் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
“லியோ” படம் வரும் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், சிறப்புக் காட்சிகள், படத்தின் வெளியீடு, டிக்கெட் விலை போன்றவை ஒன்றன் பின் ஒன்றாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தாலும், ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சியைக் காண்பிக்க வேண்டும் என்று படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, “லியோ” படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என்று கூறினோம். இந்நிலையில் ‘லியோ’ படத்தின் சிறப்பு காட்சிகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கவும், கடைசி காட்சி நள்ளிரவு 1:30 மணிக்கு முடிவடையவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அதிகாலை காட்சிக்காக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், ‘லியோ’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய போது, சில திரையரங்குகளில் ரூ.5,000 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகனங்கள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஏஎஸ் முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ‘லியோ’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை கண்காணிக்க சிறப்பு குழுவை அமைத்து அமுசா ஐஏஎஸ் உத்தரவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ள படம் ‘லியோ’. முன்னதாக, `லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது, அதில் ஆபாசமான வார்த்தைகள் இடம் பெற்றிருந்தது. இதனால், அனுமதியின்றி டிரைலர்கள் வெளியானது குறித்து விளக்கம் அளித்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு சென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதேபோல், லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின் போது ரோகினி திரையரங்கில் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பான விசாரணைகளும் நடந்து வருகின்றன. பாதுகாப்புக் காரணங்களால் லியோவின் இசை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. “லியோ’ திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே இதுபோன்ற தொடர் பிரச்சனைகளை சந்தித்துள்ளது.