ராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து அதிகளவு உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. இன்று ராஜ்மாவை வைத்து பிரியாணி செய்வது எப்படி என்று கேட்கலாம்.
ராஜ்மா பிரியாணி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
ராஜ்மா – 200 கிராம்,
பாசுமதி அரிசி – 100 கிராம்,
வெங்காயம் – ஒன்று),
தக்காளி – ஒன்று,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
கொத்தமல்லி, புதினா – ஒரு கைப்பிடி,
நெய், உப்பு – தேவையான அளவு.
தாளிக்க :
பட்டை, சோம்பு, ஏலக்காய்,
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலையில், ஊறிய ராஜ்மாவைக் களையவும். குக்கரில் ராஜ்மாவுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி பத்து விசில்கள் வரை வேக விட்டு இறக்கவும்.
* பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, அரிசியைத் உதிரியாக வேகவைத்து எடுக்கவும்.
* வாணலியில் நெய் விட்டு சூடானதும் பட்டை, சோம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி – பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கொத்தமல்லி, புதினாவை சேர்த்து வதக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும் இதனுடன் ராஜ்மா, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
* அனைத்து ஒன்றாக சேர்ந்து வதங்கி வரும் போது உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
* சூப்பரான ராஜ்மா பிரியாணி ரெடி.