32.6 C
Chennai
Monday, Sep 30, 2024
e1a3adfa f87a 4f90 b3c6 520a9faeda5a S secvpf
சைவம்

ராகி பூரி

தேவையான பொருட்கள்

ராகி மாவு – ஒரு கப்
கோதுமை மாவு – ஒரு கப்
ரவை – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை

e1a3adfa f87a 4f90 b3c6 520a9faeda5a S secvpf

* தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.

* மாவுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பூரி மாவாக பிசைந்து கொள்ளவும்.

* மாவை நீளமாக உருட்டி அதை சிறுத் துண்டுகளாக வெட்டி உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

* ஒவ்வொரு உருண்டையையும் பூரிகளாக திரட்டிக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

* சுவையான ராகி பூரி தயார்.

* கோதுமை மாவை விட ராகி மாவு தண்ணீர் அதிகம் எடுப்பதால் பதமாக தண்ணீர் தெளித்து பிசையவும். இல்லையெனில் மாவு சீக்கிரம் வறண்டு திரட்டும் போது வெடிப்புகள் வரும்.

* சப்பாத்திக்கு மாவை தளர பிசைந்து சுடவும்.

Related posts

சுவையான கோவைக்காய் ரைஸ் செய்வது எப்படி

nathan

வெண்டைக்காய் புளி மசாலா

nathan

கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு

nathan

தனியா பொடி சாதம்

nathan

ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா

nathan

மாங்கா வத்தக் குழம்பு

nathan

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

nathan

சேனைக்கிழங்கு பொடிமாஸ்

nathan

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

nathan