27.7 C
Chennai
Tuesday, Oct 1, 2024
04 1483513741 5 scrub3 10 1462869563
முகப் பராமரிப்பு

மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளைப் போக்க உதவும் ஓர் அற்புத வழி!

கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் மற்றும் அனைத்து வகையான சரும பிரச்சனைகள் வருவதற்கும் பல காரணங்கள் உள்ளன. அதில் மோசமான சரும பராமரிப்பு, அதிகப்படியான ஜங்க் உணவுகளை உட்கொள்வது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இப்படி ஏற்படும் சரும பிரச்சனைகளைத் தடுக்க ஃபேஸ் மாஸ்க்குகள், ஸ்கரப்கள், க்ரீம்கள் போன்றவற்றைக் கொண்டு அவ்வப்போது சருமத்தைப் பராமரிக்க வேண்டும். இக்கட்டுரையில் மூக்கின் மேல் இருக்கும் அசிங்கமான கரும்புள்ளிகளைப் போக்கும் ஓர் அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
உப்பு – 1/4 டீஸ்பூன்
வெள்ளை க்ளே – 1/2 டீஸ்பூன்
தயிர் – 1/4 டீஸ்பூன்
ஒட்டும் பேப்பர்
டூத் பேஸ்ட்
டூத் பிரஷ்

செய்முறை #1
முதலில் டூத் பேஸ்ட்டில் உப்பு சேர்த்து, டூத் பிரஷ் பயன்படுத்தி, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும்.

செய்முறை #2
பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

செய்முறை #3

பின்பு பேண்டேஜ் துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தின் மீது 5 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.

செய்முறை #4
பிறகு அந்த இடத்தில் க்ளே பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து தடவி, 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் மற்றும் கருமையான தழும்புகள் விரைவில் மறையும்.

குறிப்பு
இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், சருமம் மென்மையாகவும், கரும்புள்ளிகள் மற்றும் கருமையான தழும்புகளின்றி அழகாக இருக்கும்.04 1483513741 5 scrub3 10 1462869563

Related posts

தெரிஞ்சிக்கங்க… முகப்பருவை அகற்ற என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா ?

nathan

ஆரஞ்சுப் பழ சருமப் பராமரிப்பிற்கு

nathan

சூப்பர் டிப்ஸ்.. சருமத்திற்கு பால் பவுடரை இப்படி அப்ளை பண்ணுங்க

nathan

சூப்பர் டிப்ஸ்.. முகத்தை பொலிவாக்கும் பாதாம் மாஸ்க் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்…!!

nathan

இதோ எளிய நிவாரணம்! அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

nathan

புருவங்கள் அழகாக தெரிய இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளை தீர்க்கும் துளசி பேஸ் பேக்

nathan

எண்ணெய் சருமத்தினரை பொலிவாக்கும் வழிகள்

nathan

அவசியம் படிக்க..உங்கள் சருமத்தில் என்னென்ன விஷயங்கள் நீங்கள் செய்யக் கூடாது தெரியுமா?

nathan