8 15 1465981689
சரும பராமரிப்பு

முப்பது வயதுகளில் அழகை பாதுகாப்பது எப்படி ?

முப்பது வயதுகளில்தான் சுருக்கங்களும், சருமம் தொய்வடைவதும், கண்களுக்கு அடியில் பை தொங்குவதும் ஆரம்பிக்கும்.

அதனை அதனை ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் எளிதில் முதுமை தோற்றம் வராது. முன்பு போலில்லாமல் முப்பது வயதுகளிலும் பெண்கள் இருபது வயது போலத்தான் தோற்றம் கொண்டுள்ளனர். உதற்கு காரணம் சரும பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வே காரணம்.

வயதாகிவிட்டதே என ஒருபோதும் நினைக்கவே கூடாது. வயது என்பது பிறப்பிலிருந்து எண்ணப்படும் ஒரு எண்ணிக்கைதான். அதற்கும் இளமைக்கும் சம்பந்தமில்லை.

நல்ல ஆரோக்கியமான உணவுடன், அழகையும் பராமரித்துவந்தால் இளமையாக இருக்கலாம். ஐம்பது வயதிலும் இளமையாக இருக்கும் நதியா, 40 களில் இளமையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் இவர்களே நல்ல உதாரணம். ஆகவே சருமப்பராமரிப்பை இன்றே தொடங்குங்கள்.

நீர் குடித்தல் : இளமையாக இருப்பவர்களிடன் போய் சோதித்துப் பாருங்கள். அவர்கள் நிறைய நீர் குடிப்பவர்களாகத்தான் இருப்பார்கள். ஒருவகையில் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களும், இறந்த செல்களுமே வயதான தோற்றத்தை தரும். அவற்றை தினமும் வெளியேற்றிவிட்டால் சருமம் இளமையாகவே இருக்கும்.

ஆன்டி ஆஜிங் மாஸ்க் : வீட்டிலேயே இயற்கை முறையில் பப்பாளி, முட்டை, தேன் என பயன்படுத்தினால் சருமத்தில் சுருக்கங்கள் இல்லாமல், இறுக்கமான சருமத்தைப் பெற்று தொய்வடைவதிலிருந்து பாதுகாக்க முடியும். வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை இதனை செய்தால் போதும்.

ஃபேஸியல் ஸ்க்ரப் : சர்க்கரை, கடலை மாவு, பயிற்றம் மாவு போன்ற இயற்கையான ஸ்கர்ப்பினால் சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை அகற்றுங்கள். இவை சருமத்தை முதிர்ச்சி அடையாமல் காக்கும்.

உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு : என்ன உணவு சாப்பிடுகிறீர்களோ அதை பொறுத்துதான் உறுப்புக்கள் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் இருக்கும். சருமம் என்பது வெறும் அழகு என்றில்லாமல் ஆரோக்கிய சம்பந்தப்பட்ட உறுப்பு.

ஆகவே இரண்டு வகையிலும் பயன் தரும் சருமத்தை ஆரோக்கியமான உணவினாலும் உங்கள் அழகை வெளிக் கொண்டு வர முடியும். ஆகவே நல்ல உணவுகள் உடற்பயிற்சியை தவறாமல் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

சன் ஸ்க்ரீன் லோஷன் : சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தை பாதிக்கும் முதுமை அடையச் செய்யும். ஆகவே சன் ஸ்க்ரீன் லோஷன் இல்லாமல் வெளியே போக வேண்டாம். இயற்கையான ஹெர்பல் சன் ஸ்க்ரீன் லோஷன் நல்லது.

இரவுகளில் சருமத்திற்கு போஷாக்கு தரும் க்ரீம்களை தடவலாம். க்ரீம்தான் தடவ வேண்டுமென்பது இல்லை. ஆலிவ் எண்ணெய், பால் க்ரீம் , தேங்காய் என்ணெய் ஆகியவற்றை தடவினால் இரவில் வெகு நேரம் எண்ணெய் சருமத்தில் ஊடுருவி, மெருகூட்டும்

ஈரப்பதத்தை சருமத்திற்கு அளியுங்கள் : முப்பதுகளில் சருமத்தில் வறட்சி தோன்ற ஆரம்பிக்கும். ஆகவே சருமம் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். நிறைய நீர் குடித்தும் மாய்ஸ்ரைசரை உபயோகித்தும் சருமத்தில் வறட்சி ஏற்படுத்தாமல் காத்திட வேண்டுவது முக்கியம். வீட்டில் இருக்கும் , பால், தேன், பாதாம் ஆகியவை சருமத்திற்கு போஷாக்கு அளித்து, ஈரப்பதத்தை தக்க வைக்கும்.8 15 1465981689

Related posts

தெளிவான சரும அழகு பெற 5 வழிகள்

nathan

வெயில் காலத்தில் சருமம் நிறம் மாறுவதை தடுக்க

nathan

பெண்களே உங்க கை வயசானவங்க கை மாதிரி இருக்கா? இத ட்ரை பண்ணுங்க…

nathan

குளிர் காலத்துலயும் சருமம் பட்டு போல மாறனுமா? இந்த ஹெர்பல் க்ரீம் யூஸ் பன்ணுங்க

nathan

உங்களுக்கு தெரியுமா கொரிய நாட்டுப் பெண்கள் தங்கள் அழகுக்காக இதெல்லாமா செய்வார்கள்!

nathan

ரசாயனக் கலப்பற்ற கற்றாழை ஜெல்……

sangika

சருமத்தை ஜொலிக்க வைக்கும் குளியல் பொடி

nathan

வசிகரமான முகத்தை பெற இதோ ஈஸியான சில டிப்ஸ்….!

nathan

சருமம் பளபளக்க வேண்டுமா?

nathan