முகம் கை கால் என ஒவ்வொன்றிற்கும் தரும் முக்கியத்துவத்தை முதுகு பகுதிக்கு தருவதில்லை. நம்மில் பெரும்பாலோனோர் அதிகம்
கவனிக்காமல் விடும் பகுதியும் முதுகுதான். இதனால் முதுகு பகுதியில் அழுக்கு மற்றும் எண்ணெய் சேர்ந்து பருக்கள் தோன்றுவிடுகின்றன. எனவே முதுகை அழகாக்க கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
முதுகை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள அவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள். நீங்களும் உங்கள் முதுகின் அழகை எடுத்துக்காட்டும் ஆடைகளை அணிய ஆரம்பித்து விடுவீர்கள்.
குளிக்கும் போது முகம், கை, கால்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவப்போல முதுகையும் கவனிக்க வேண்டும். தலைக்கு குளிக்கும் போது வழியும் எண்ணெய்கள் முதுகில்தான் தேங்குகின்றன. எனவே நீளமான பிரஷ் உபயோகித்து முதுகை நன்கு தேய்த்து சுத்தம் செய்யவேண்டும். முதுகுப் பகுதியை முழுவதாக சுத்தம் செய்ய இப்பொழுது நீண்ட கைப்பிடி உள்ள பிரஷ் கடைகளில் கிடைக்கிறது. அவற்றை வாங்கி உபயோகிக்கலாம்.
முதுகை `ஸ்க்ரப்’ செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும். அவ்வாறு தொடர்ந்து செய்யும் போது புது சருமம் கிடைக்கும். கடையில் கிடைக்கும் ஸ்க்ரப் உபயோகிக்க விருப்பமில்லை என்றால், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். உப்பு சிறந்த ஸ்க்ரப் ஆக பயன்படுகிறது. உப்பை நன்றாக பொடித்து அதை நன்றாக முதுகு, கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஸ்க்ரப் செய்வதன் மூல இறந்த செல்கள் உதிர்ந்து விடும். ரத்த ஓட்டம் சீராகும். இதனால் முதுகும் பார்க்க அழகாக தெரியும்.