29.4 C
Chennai
Wednesday, Oct 2, 2024
dryhair 1638269292
தலைமுடி சிகிச்சை

முடி ரொம்ப வறண்டு இருக்குதா?அப்ப இத யூஸ் பண்ணுங்க…

உடலிலேயே சருமம் தான் மிகப்பெரிய உறுப்பு. இந்த சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருப்பதற்கு எப்படி போதுமான ஈரப்பதம் தேவையோ அதேப் போல் தான் தலைமுடிக்கும் ஈரப்பதம் அவசியமான ஒன்று. ஒருவரது தலைமுடியில் போதுமான ஈரப்பதம் இல்லாவிட்டால், முடி வறண்டு உடைய ஆரம்பித்துவிடும். அது தலைமுடிக்கு போதுமான ஈரப்பதம் இருந்தால், முடியில் ஏற்படும் சிக்கல் குறைந்து, தலைமுடி ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்.

தலைமுடிக்கு தேவையான ஈரப்பதமானது எண்ணெய் பூசுவதன் மூலம் பெறப்படுகிறது. பொதுவாக தலைமுடிக்கு நாம் தேங்காய் எண்ணெயை தினமும் பயன்படுத்துவோம். ஆனால் தற்போதைய தலைமுறையினர் தங்களின் தலைக்கு எண்ணெய் பூச விரும்புவதில்லை. சொல்லப்போனால் எண்ணெய் கூட தலைமுடிக்கு நன்மையுடன் தீமையையும் உண்டாக்குகின்றன. எப்படியென்றால் எண்ணெய் தலைமுடியில் ஊடுருவுவதற்கு பதிலாக, மயிர்கால்களில் அடைப்பை உண்டாக்குகின்றன. எனவே தலைமுடியின் வறட்சியைத் தடுக்க எண்ணெய்க்கு பதிலாக, பின்வரும் சில பொருட்களைக் கொண்டு முடிக்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், முடி ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும், சிக்கலின்றியும் இருக்கும்.

தயிர்

கால்சியம் மற்றும் புரோட்டீன் ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்த தயிரில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளன. இவை அனைத்துமே முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடியவை. மேலும் தயிர் மற்றும் யோகர்ட் ஆகிய இரண்டும் முடி சொரசொரப்பைக் குறைப்பதோடு, தலைமுடியை ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் வைத்துக் கொள்கிறது. குறிப்பாக தயிரில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், தலையில் உள்ள பொடுகைப் போக்க உதவும் பொருளாக இருக்கும்.

அவகேடோ

அவகேடோவில் பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, தலைமுடியின் வறட்சியைப் போக்குவதிலும் சிறந்தது. இந்த அவகேடா அனைத்து வகையான தலைமுடியினருக்கும் நன்மையை வழங்கும். அதற்கு அவகேடோ பழத்தின் சதைப் பகுதியை அரைத்து, அதை ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலசி வந்தால், முடி ஆரோக்கியமாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இயற்கை எண்ணெய்களுடன், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் முடியின் கால்களை மென்மையாக்குவதோடு, முடியின் நெகிழ்வுத்தன்மையைப் பாதுகாக்கிறது, முடி வெடிப்பு மற்றும் முடி உடைவதைத் தடுக்கிறது மற்றும் பொடுகுத் தொல்லையைக் கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக முடி ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், அடர்த்தியாகவும் மாறுகிறது. எனவே அடிக்கடி வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்கள். அதுவும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, ஈரமான தலைமுடியில் தடவி, ஷவர் கேப் அணிந்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.

தேன்

தேன் ஒரு மென்மையாக்கும் பொருளாகும். இது முடியின் மயிர்கால்களை மென்மையாக்க உதவுகிறது மற்றும் பொலிவிழந்த முடிக்கு பிரகாசத்தை வழங்குகிறது. தேன் ஒரு சிறப்பான ஈரப்பதமூட்டி. இதைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், முடி வறட்சி நீங்கி, அதில் உள்ள ஊட்டச்சத்துக்களால் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக தேனில் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளதால், இது பொடுகுத் தொல்லை மற்றும் அழற்சி போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே தேனை தலைக்கு பயன்படுத்த அச்சம் கொள்ள வேண்டாம்.

முட்டை

முட்டை தலைமுடிக்கு ஈரப்பதத்தை அளிப்பதோடு மட்டுமின்றி, பாதிப்படைந்த முடியை சரிசெய்யவும், ஸ்கால்ப்பை வறட்சியடையாமலும் தடுக்கிறது. மேலும் முட்டையில் புரோட்டீன் மற்றும் பயோடின் அதிகம் உள்ளதால், இது ஸ்கால்ப் மற்றும் தலைமுடிக்கு போதுமான ஊட்டமளித்து, முடியின் வளர்ச்சியையும், வலிமையையும் அதிகரித்து, முடியை அழகாக வைத்திருக்க உதவுகிறது. ஆகவே உங்கள் முடி அதிகம் வறண்டு காணப்பட்டால், முட்டையை உடைத்து நல்லெண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலையில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்த, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.

Related posts

அடர்த்தியான தலைமுடி வேண்டுமா?!!

nathan

நீளமாக கூந்தல் வளர உதவும் இயற்கை ஷாம்பு பூந்திக் கொட்டை !!சூப்பர் டிப்ஸ்

nathan

Tips.. நரைமுடி வருவதற்கான சரியான காரணம் என்ன? அவை ஏற்படுவதற்கு முன் தடுக்க முடியுமா?

nathan

வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தலாம்.

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் ஜூஸ்கள்

nathan

வலுவான முடி வளர்ச்சிக்கு ஹென்னா முடி எண்ணெய் எவ்வாறு பயன்படுத்துவது

nathan

உங்க முடி ரொம்ப வறண்டு இருக்குதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சியைப் பயன்படுத்துவது எப்படி?

nathan