முடி உதிர ஆரம்பித்தால், வருத்தப்படாமல் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு, முடியை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ள முயல வேண்டும். இப்போது முடி உதிர்வை தடுக்கும் கிராமத்து பாட்டி வைத்திய முறைகளை பார்க்கலாம்.
* பீர்க்கங்காயின் தோலை நீக்கி விட்டு சதைபகுதியில் சில துண்டுகளை தேங்காய் எண்ணெயில் போட்டு எண்ணெய் கருப்பாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் இறக்கி குளிர வைத்து, தினமும் ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது படிப்படியாக குறையும்.
* நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சீமைச்சாமந்தி பொடியை வாங்கி நீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி மீண்டும் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து, பின் அதனை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இந்த செயலை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தலைமுடி வலிமையடையும். முடி கொட்டுவதும் படிப்படியாக குறையும்.
* சுரைக்காயை அரைத்து அதன் சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் அடர்த்தி அதிகரித்திருப்பதைக் காணலாம்.
* வால்நட்ஸை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.