முடி வளர்ச்சியை ஊக்குவிக்க, புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். ஆரோக்கியமான உணவைத் தவிர, உங்கள் முடியின் வேர்களுக்கு புரதத்தையும் வழங்க வேண்டும்.
முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான முடியை அடைவதிலும் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது.
கேரட் ஹேர் செய்முறை: கேரட் 1, தேங்காய் பால் சிறிதளவு, பாதாம் எண்ணெய் 1 ஸ்பூன். முதலில் கேரட்டை தோல் சீவி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து பின் வடிகட்டி கேரட் சாறினை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் கேரட் ஜூஸுடன் சிறிதளவு தேங்காய் பால், 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
கேரட் ஹேர் பேக்கினை நன்கு முடியின் வேர்கால்களில் படும்படி தடவி நன்றாக மசாஜ் செய்து கொள்ளளவும். பின்னர் ஷாம்புவினை பயன்படுத்தி தலைமுடியை அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் தலைமுடி வலுப்பெற்று கூந்தல் அடர்த்தியாக வளரும்.