முதலில் முகத்திற்கு மென்மையாக்கும் களிம்பு மற்றும் ஃபவுடன்டேஷன் போட்டுவிட்டு பிறகு உங்களது செயலைத் துவக்குங்கள்.
முதலில் லிப் லைனரை உதடுகளில் தடவுங்கள், பிறகு லிப்ஸ்டிக். இதனால் 2வது முறை அப்ளை செய்யப்படும் உதட்டுச் சாயம் நீண்ட நேரத்திற்கு இருக்கும். பழைய உதட்டுச் சாயங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் இதனால் உதடுகள் வெளிறிவிடலாம்.
கருத்த உதடுகளுக்கு இளம்சிவப்பு உதட்டுச்சாயம் பொருத்தமாக இருக்கும். வெளிரிய உதடுகளைக் கொண்டவர்கள் அடர்த்தியான நிறத்தைப் பயன்படுத்தலாம்.
மேக்-அப் செய்யும் முன் லோஷன் ஏதாவது பயன்படுத்தவும். முகம் முழுவதும் சரியான அளவில் ஃபவுண்டேஷன் போட்டால் சருமத்தில் இருக்கும் புள்ளிகள் வெளியே தெரியாது.
கடைசியாக ஐ லைனரை போடவும். ஐ லைனர் விரைவில் காயும் திறன் கொண்டதாகப் பார்த்து வாங்கவும். இல்லை என்றால் முகத்தையே அது கெடுத்துவிடும்.